எளிதாக உடல் எடையை குறைக்க வேண்டுமா?
7 ஆனி 2025 சனி 15:04 | பார்வைகள் : 11131
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் அதற்கு நிறைய அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கம் தேவைப்படுகிறது. மேலும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட பல விஷயங்களைச் சேர்த்துத் தவறாமல் பின்பற்றினால் மட்டுமே விரும்பிய பலனைப் பெற முடியும்.
எடை குறைப்பிற்குத் தேவையான பழக்கங்களைப் பின்பற்றும் போதும் கூட, சில சீரற்ற பழக்கங்களை நீங்கள் இன்னும் உங்களுடன் வைத்துக் கொண்டிருந்தால் எடையைக் குறைக்க முடியாமல் திணறக் கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், சரியான விஷயங்களையும் செய்வதோடு, ஆரோக்கிய வழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும் உடல் எடையைக் குறைக்கிறோம் மற்றும் இதுவே நிலையானது. அந்த வகையில் எடையைக் குறைக்க உதவும் 5 ஆரோக்கியமான இரவு நேரப் பழக்கங்களை தெரிந்துகொள்ளலாம்.
இரவு உணவைத் தாமதமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்: உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும் முக்கிய விஷயங்களில் ஒன்று, இரவில் தாமதமாகச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது. நீங்கள் தூங்குவதற்குக் கொஞ்ச நேரம் முன்பாகச் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்குக் கலோரிகளை எரிக்கப் போதுமான நேரம் கிடைக்காமல் போகிறது. மேலும் நீங்கள் லேட்டாகச் சாப்பிடும் உணவானது, உடலில் கொழுப்பாகச் சேமிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே இரவு நீங்கள் தூங்கச் செல்வதற்கு 2 - 3 மணிநேரங்கள் முன்பாகச் சாப்பிட்டு விடுங்கள். இந்தப் பழக்கம் உண்ட உணவை உங்கள் உடல் ஜீரணிக்க நேரம் அளிக்கிறது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதே போல இரவில் தாமதமாகச் சாப்பிடுவது உங்கள் தூக்கத்தையும் தொந்தரவு செய்யும். மேலும் இது பசி மற்றும் முழுமை உணர்வைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களையும் பாதிக்கிறது.
நல்ல உறக்கமும் அவசியம்: எடை குறைப்பு முயற்சி என்று வரும்போது தூக்கத்தைப் பெரும்பாலும் மக்கள் கருத்தில் கொள்வதில்லை, ஆனால் இது மிகவும் முக்கியமானது. இரவு தூக்கம் சரியாக இல்லாத போது ghrelin போன்ற பசி ஹார்மோன்களை அதிகரித்து, லெப்டின் என்ற ஹார்மோனைக் குறைக்கும். லெப்டின் ஹார்மோன் அளவுகள் குறையும் போது, அது பசி அதிகரிப்பதற்கும், ஆற்றல் செலவு குறைவதற்கும், பிற வளர்சிதை மாற்ற இடையூறுகளும் ஏற்பட வழிவகுக்கும். இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அதிகமாகச் சாப்பிட, ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான ஏக்கத்தை அதிகரிக்கக் கூடும். எனவே தினசரி இரவு 7 முதல் 8 மணிநேரம் நன்கு நிம்மதியாகத் தூங்குவதை நோக்கமாகக் கொள்ளுங்கள். உங்கள் படுக்கையறையில் அமைதியான மற்றும் இருண்ட சூழலை உருவாக்குங்கள், படுக்கைக்கு முன் டிஜிட்டல் கேஜெட் பயன்பாடுகளைத் தவிர்க்கவும், ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்ல முயற்சிக்கவும்.
பானங்களைத் தவிர்க்கவும்: சிலர் இரவு உணவின் போது அல்லது இரவு சிற்றுண்டியாகச் சர்க்கரை நிறைந்த சோடாக்கள் அல்லது ஜூஸ்ஸைக் குடிக்கிறார்கள். இந்தப் பானங்கள் உடலில் கூடுதல் கலோரிகளைச் சேர்க்கின்றன, இதனால் உடல் எடை இழப்பது கடினமாகிறது. இதற்குப் பதில் மாலை நேரங்களில் அவ்வப்போது தண்ணீர் குடிக்கவும். தண்ணீர் செரிமானத்திற்கு உதவுவதோடு, உங்களை ஹைட்ரேட்டாக வைக்கிறது. சில நேரங்களில் தாக உணர்வானது பசி உணர்வோடு குழப்பமடையக் கூடும். எனவே தண்ணீர் குடிப்பது தேவையற்ற சிற்றுண்டி சாப்பிடுவதைக்குறைக்கும். ஒருவேளை தூங்குவதற்கு முன் சூடான பானம் பருக விரும்பினால், சர்க்கரையின்றி மூலிகைத் தேநீரைப் பருகலாம். மாலை 5 மணிக்குப் பிறகு தண்ணீரை அதிகம் குடிப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படும், இது தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடும். மிதமான அளவு தண்ணீர் பருகுங்கள்.
ஹெவியான உணவுகளுக்கு "நோ": இரவு நேரங்களில் ஹெவியான, வறுத்த அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கும், அசௌகரியத்தை ஏற்படுத்தும். பொதுவாக இவற்றில் கலோரிகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் இருக்கும், இது எடை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே மாலை அல்லது இரவு நேரங்களில் காய்கறிகள், கோழி அல்லது மீன் போன்ற லீன் புரோட்டீன் மற்றும் முழு தானியங்கள் போன்ற எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளைச் சாப்பிடுங்கள். இரவு உணவு ஹெவியாக இல்லாமல் இருப்பது உங்கள் உடல் ஓய்வெடுக்க, தூக்கத்தின் போது உடல் தன்னைத்தானே சரிசெய்யவும் உதவுகிறது.
தூங்கும் முன் ரிலாக்ஸ் செய்யவும்: மன அழுத்தம், குறிப்பாக வயிற்றைச் சுற்றிக் கொழுப்பைச் சேமிக்க வைக்கும் கார்டிசோல் என்ற ஹார்மோனை அதிகரிப்பதன் மூலம் உங்கள் உடல் எடையைக் கணிசமாகப் பாதிக்கலாம். நீங்கள் மன அழுத்தத்துடன் அல்லது கவலையுடன் தூங்கச் சென்றால், அது உங்கள் தூக்கத்தையும் தொந்தரவு செய்து, தேவையற்ற இரவு நேரப் பசிக்கு வழிவகுக்கும். எனவே தூங்கச் செல்லும் முன் ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, தியானம் அல்லது லேசான ஸ்ட்ரெச் பயிற்சி மூலம் ரிலாக்ஸ் செய்ய முயற்சியுங்கள். அமைதியான இசையைக் கேட்பது அல்லது புத்தகம் படிப்பதும் உதவும். உங்கள் மனம் அமைதியாக இருக்கும்போது, நீங்கள் நன்றாகத் தூங்குவீர்கள். இதனால் உங்கள் உடல் கொழுப்பை எரிப்பதில் கவனம் செலுத்த முடியும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire