ரொனால்டோவின் மாயம்- இரண்டாவது முறையாக நேஷன்ஸ் லீக் கோப்பையை வென்ற போர்ச்சுகல்
9 ஆனி 2025 திங்கள் 08:08 | பார்வைகள் : 4697
ஜேர்மனியின் முனிச்சில் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி, ஸ்பெயினை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஜேர்மனியின் முனிச்சில் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி ஜூபிமெண்டி அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்றது.
ஆனால், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, 26வது நிமிடத்தில் நூனோ மென்டெஸ் போர்ச்சுகலுக்காக ஒரு அற்புதமான கோலை அடித்து சமன் செய்தார்.
முதல் பாதி முடிவதற்குள், 45வது நிமிடத்தில் ஓயர்சபால் அடித்த கோலால் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில், போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கினார்.
69வது நிமிடத்தில் அவர் ஒரு அசத்தலான கோலை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
வழக்கமான நேரம் முடிவடைந்தபோது, ஆட்டம் சமநிலையில் இருந்ததால், பெனால்டி ஷூட் அவுட் முறைக்குச் சென்றது.
பெனால்டி ஷூட் அவுட்டில் போர்ச்சுகல் அணி சிறப்பாக செயல்பட்டு, 5-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, 2024-25 UEFA நேஷன்ஸ் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire