'குபேரா' ரன்னிங் டைம் ட்ரிம் செய்யப்படுமா?
9 ஆனி 2025 திங்கள் 18:06 | பார்வைகள் : 5485
தனுஷ் நடித்த ‘குபேரா’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரிலீசுக்கு முன்பே டிரிம் செய்யப்படுமா அல்லது ரிலீசுக்கு பின் ரசிகர்களின் அதிருப்திக்கு பின் ட்ரிம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகார்ஜுனா நடித்த ‘குபேரா’ திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதே சமயம், இந்த படத்தின் தணிக்கை வாரியத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த படத்தின் மொத்த ரன்னிங் டைம் 195 நிமிடங்கள், அதாவது 3 மணி நேரம் 15 நிமிடங்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக வெளியான இந்தியன் 2 உட்பட சில படங்கள் 3 மணி நேரத்திற்கும் மேல் இருந்த நிலையில், அவை ரிலீசுக்கு பின்னர் ட்ரிம் செய்யப்பட்டன.
அதேபோல், ‘குபேரா’ படமும் ரிலீசுக்கு பின்னர் ட்ரிம் செய்யப்படுமா அல்லது படக்குழுவினர் சுதாரித்து ரிலீசுக்கு முன்பே ட்ரிம் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire