பாடகி கெனிஷா கர்ப்பமாக இருக்கிறாரா?
10 ஆனி 2025 செவ்வாய் 17:20 | பார்வைகள் : 10785
ரவி மோகன், ஆர்த்தி ரவி, கெனிஷா இடையேயான பிரச்சினை குறித்து தினசரியும் ஊடகங்களில் ஏதாவது ஒரு செய்து வந்து கொண்டேதான் இருக்கிறது. ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்வதாக ரவி மோகன் அறிவித்த நாளில் இருந்து ஊடகங்களில் பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமில்லை.
பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் பழகி வருவதால் தான் ஆர்த்தியை பிரிந்து விட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. அது உண்மைதான் என்று சொல்வது போல கெனிஷா மற்றும் ரவி மோகன் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த மாதம் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் வீட்டு திருமண நிகழ்ச்சியில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் புதுமணத்தம்பதியர் போல ஜோடியாக கலந்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் சிலர் கூறி வந்தனர்.
அதை எல்லாம் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் மறுத்திருந்தனர். தனித்தனியாக விளக்கம் அளித்திருந்தனர். அதைத்தொடர்ந்து ஆர்த்தி ரவியின் காட்டமான பதிவு, அதற்கு ரவி மோகன் கொடுத்த விளக்கம் என மாறி மாறி ஊடகங்களுக்கு தீனி போட்டுக்கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில்தான் கெனிஷா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று அவரிடம் சிர்ல கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு கெனிஷா சமீபத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். நான் அழகாக சிக்ஸ் பேக்ஸ் வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ள அவர், தனது பெற்றோர் பற்றியும் குடும்பம் பற்றியும் கூறியுள்ளார்.
நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்தேன். கனடாவில் இசை கல்லூரியில் படித்து முடித்த பிறகு மீண்டும் பெங்களூருக்கு வந்து விட்டேன்.
என்னுடைய அம்மாவும் பாடகி, அப்பாவும் பாடகர். எனக்கு 17 வயதாக இருக்கும்போது அவர்கள் இறந்து விட்டாங்க. அதற்குப் பிறகு என்னுடைய வாழ்க்கையில் நான் பல கஷ்டங்களை கடந்து தான் வந்திருக்கிறேன்.
முதலில் காபி ஷாப் ஒன்றில் 500 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். இப்போ கூட சோசியல் மீடியாவில் என்னைப் பற்றியும் என்னுடைய அப்பா, அம்மா பற்றியும் பலர் தப்பு தப்பா பேசுறீங்க. உங்களுக்கு வாய் இருக்கிறது என்று நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதுவே நாளைக்கு உங்களுக்கு திரும்ப கிடைக்கும் “கர்மா” சும்மா விடாது என்று சாபம் விட்டுள்ளார்.
நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூட சிலர் கருத்துக்கள் பகிர்ந்து வருகிறார்கள். எனக்கு சிக்ஸ் பேக் தான் இருக்கிறது. “நான் ஒன்றும் கர்ப்பமாக இல்லை” யார் என்ன பேசினாலும் அது அவர்களுக்கு திரும்ப வரும். கர்மா சும்மா விடாது. எது உண்மை எது பொய் என்று எல்லோருக்கும் ஒரு நாள் தெரியும் என்று கொந்தளித்துள்ளார் கெனிஷா.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire