இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணம் 15% அதிகரிப்பு
11 ஆனி 2025 புதன் 12:15 | பார்வைகள் : 5967
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
சிறிய நுகர்வு மற்றும் 90 அலகுகளுக்கு குறைவான மதத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 30 அலகுகளுக்கு குறைவான வீட்டு பிரிவிற்கு 8% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.75 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் இன்று நள்ளிரவு முதல் ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
30 - 60 அலகு பிரிவின் ஒரு அலகுக்கு இதுவரை இருந்த விலை 2 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் ஒரு அலகின் புதிய விலை ரூ.8 ஆகும்.
அதன்படி, அந்த பிரிவின் மாதாந்திர கட்டணம் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.210 ஆக மாறியுள்ளது.
இதற்கிடையில், 61 - 90 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.240 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
91 - 120 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.360 ஆகும்.
121 - 150 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.600 ஆகும்.
121 - 180 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.840 ஆகவும், 180 அலகுகளுக்கு மேல் உள்ள பிரிவிற்கு ரூ.2020 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வீட்டு பிரிவில் மின்சாரக் கட்டணத் திருத்தம் ரூ.20 லிருந்து ரூ.2020 ஆகவும் அதிகரித்துள்ளது.
180 அலகுகளுக்கு மேல் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கான மாதாந்திர நிலையான கட்டணங்களில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்பதுடன், அலகுகளுக்கான கட்டணம் மட்டுமே அதிகரிக்கும்.
பெரிய தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ. 5,000 அப்படியே காணப்படுவதுடன், மாதாந்திர விண்ணப்பக் கட்டணம் மட்டும் ரூ. 100 அதிகரிக்கும்.
அதன்படி, மேற்கண்ட பிரிவில் ரூ.23 ஆக நிலவிய ஒரு அலகு கட்டணம் ரூ.28 ஆகவும், ரூ.13 ஆக நிலவிய ஒரு அலகின் கட்டணம் ரூ.15 ஆகவும், ரூ.11 ஆக நிலவிய ஒரு அலகு கட்டணம் ரூ.12 ஆகவும் அதிகரிக்கும்.
அதன்படி, கட்டண அதிகரிப்பு 50 சதம் முதல் ரூ.9 வரை அதிகரித்து, மாதாந்திர வீத அதிகரிப்பு ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire