கைதி 2' படத்தில் கமல்ஹாசன் - சூர்யா?
14 ஆனி 2025 சனி 14:56 | பார்வைகள் : 4850
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ள நிலையில், இந்தப் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'கூலி' திரைப்படம் ரிலீஸ் ஆனவுடன் அவர் 'கைதி 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'கைதி 2' திரைப்படத்தில் மொத்தம் நான்கு LCU கதாபாத்திரங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, 'கைதி' படத்தில் உள்ள கார்த்தியின் டில்லி கதாபாத்திரம் போக, 'விக்ரம்' படத்தின் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகிய மூன்று கதாபாத்திரங்களும் உள்ளன.
எனவே, 'கைதி 2' படத்தில் டில்லி, விக்ரம், சந்தானம் மற்றும் ரோலக்ஸ் ஆகிய நான்கு கதாபாத்திரங்களும் இருக்கும் என்று கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire