ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் இன்அதிரடி !
14 ஆனி 2025 சனி 15:56 | பார்வைகள் : 4528
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஒரு பக்கம் 'கூலி' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கமாக தற்காப்பு கலையில் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' என்ற படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது இந்தப் படத்தின் டப்பிங் உள்பட தொழில்நுட்பப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். 'கூலி' படம் வெளியானவுடன், அவர் கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி 2' படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் 'விக்ரம்' படத்தில் இடம்பெற்ற விக்ரம், சந்தானம், ரோலக்ஸ் போன்ற கதாபாத்திரங்கள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தின் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருப்பதாகவும், இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காகத்தான் லோகேஷ் கனகராஜ் தற்போது தற்காப்பு கலையில் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire