Paristamil Navigation Paristamil advert login

யாழில் கணவன் - மனைவி இணைந்து செய்த மோசமான செயல்

யாழில் கணவன் - மனைவி இணைந்து செய்த மோசமான செயல்

19 ஆனி 2025 வியாழன் 09:39 | பார்வைகள் : 5328


யாழ்ப்பாணத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் கணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கணவன் மனைவி ஆகியோர் கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் 12 கிராம் 40 மில்லி கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது மனைவியும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் , மனைவி தலைமறைவாகியுள்ளார்.

மனைவியை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2