மெஸ்ஸியா… ரொனால்டோவா? கூகுள் சிஇஓ சந்தர் பிச்சை கூறிய பதில்
19 ஆனி 2025 வியாழன் 12:39 | பார்வைகள் : 3817
மெஸ்ஸியா? ரொனால்டோவா?”- கால்பந்து உலகின் நீண்ட நாள் விவாதத்தில் தற்போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன்னுடைய பதிலை தெரிவித்துள்ளார்.
ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுந்தர் பிச்சை, “எனக்குப் பிடிச்சது மெஸ்ஸி தான்” என உறுதியாகக் கூறியுள்ளார்.
சுந்தர் பிச்சை கூறியதாவது: “ரொனால்டோவின் திறமையும், தன்னலம் இல்லாத உழைப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.
ஆனால், மெஸ்ஸி பந்தைப் பிடிக்கும் தருணத்தில் ஏற்படும் அந்த மாயையை சொல்லவே முடியாது. அதைப் பார்த்தால்தான் உணர முடியும்.”
மேலும், கடந்த வாரம் மெஸ்ஸி விளையாடும் ஒரு போட்டியை நேரில் சென்று பார்த்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்தார். “அவர் வயதானபோதும் பந்துடன் அவர் கையாளும் மாயை வியப்பூட்டுவதாக இருந்தது” எனச் சுந்தர் பிச்சை கூறினார்.
ஆனால், இவரது மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர் என்பதையும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
“எங்களது வீட்டில் ‘எல் கிளாசிகோ’ (பார்சலோனா-ரியல் மாட்ரிட் போட்டி) பார்ப்பது ஒரு தனி அனுபவம் தான்” என்று கூறிய பிச்சை, குடும்பத்தில் கூட இந்த விவாதம் தொடர்கிறது என சிரித்தார்.
அதே நேரத்தில், கூகுளை வழிநடத்துவது பார்சலோனா அல்லது ரியல் மாட்ரிட் கோச் ஆக இருப்பதைப்போல் தான் என்றும், “சில சீசன்கள் மோசமாக இருக்கலாம்” என உண்மையோடு கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire