மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் தி.மு.க.,வுக்கு பா.ஜ., கண்டனம்
2 ஆனி 2025 திங்கள் 10:38 | பார்வைகள் : 7006
தி.மு.க., பொதுக்குழுவில், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
எப்போதெல்லாம் தி.மு.க., அரசுக்கு எதிராக, மக்கள் மத்தியில் கொந்தளிப்பு கிளம்புகிறதோ, அப்போதெல்லாம் மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்தி, மக்களை திசை திருப்புவதை, முதல்வர் ஸ்டாலின் முழுநேரப் பணியாக செய்து வருகிறார்.
தொடர்ந்து மத்திய அரசு நிதி விஷயத்தில், தமிழகத்தை வஞ்சிக்கிறது என்ற உண்மையற்ற பரப்புரையை, தி.மு.க., வைத்துக் கொண்டே வருகிறது. கடந்த 2014 முதல் வசூலிக்கப்பட்ட வரியை விட, அதிகமாக தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
காங்., ஆட்சி காலத்தை விட, அனைத்து துறைகளிலும், அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் மட்டுமே, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, தமிழ் விரோதமாக கீழடி ஆய்வை மறுக்கிறது என்பது அடிப்படையற்ற பொய். வழக்கமாக நிபுணர் குழு வழங்கும் திருத்தங்களை மேற்கொள்ளக் கூறிய, தொல்லியல் துறையின் மீது, அரசியல் சாயம் பூச முயற்சிப்பது அநியாயம்.
தி.மு.க., அங்கம் வகித்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தமிழக ரயில்வே துறைக்கு, ஓராண்டுக்கு சராசரியாக 800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், நடப்பாண்டு பட்ஜெட்டில் மட்டும், 6,626 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில் 1,302 கி.மீ., புதிய ரயில் தடங்கள் உருவாக்கப்பட்டு, 33,467 கோடி ரூபாய் மதிப்பில், புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை, மத்திய அரசின் ஆளுகைக்குள் வராத, சுயாதீன அமைப்புகள். தி.மு.க.,வினரின் ஊழல்கள் குறித்து, நியாயமாக பதியப்பட்ட புகார்கள் அடிப்படையில் விசாரித்தால், அவற்றை பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறுவது திசைதிருப்பும் நடவடிக்கையே.
மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க., தீர்மானங்கள் அனைத்தும், உண்மையை எதிர்கொள்ள முடியாத, ஒருதலைப்பட்ச அரசியலின் வெளிப்பாடாகும். எனவே, தங்கள் ஆட்சியின் தவறுகளை, தேவையற்ற தீர்மானங்கள் வழியே, திரையிட்டு மறைக்க முயற்சிக்க வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire