Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது

14 ஆடி 2025 திங்கள் 14:12 | பார்வைகள் : 3021


சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 4.9 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவர் ஆவார்.

சந்தேக நபரான பெண் நேற்றைய  தினம் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது சந்தேக நபரான பெண்ணின் பயணப்பொதிகளில் இருந்து 29,800 சிகரட்டுக்கள் அடங்கிய 149 கார்டூன்கள் விமான நிலைய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2