Paristamil Navigation Paristamil advert login

கொழும்பில் போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது

கொழும்பில் போலி நாணயத்தாள்களுடன் பெண் கைது

15 ஆடி 2025 செவ்வாய் 10:37 | பார்வைகள் : 3232


மொரட்டுவை பகுதியில்  போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் மொரட்டுவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சோதனை நடவடிக்கையானது நேற்று செவ்வாய்க்கிழமை  மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியைச்  சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை மேலும் விசாரித்தபோது, இந்த போலி நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு அச்சு இயந்திரம்,  5,000 ரூபா  நாணயத்தாள்கள் 25 ,  1,000  ரூபா  நாணயத்தாள்கள் 08,   100 ரூபா   நாணயத்தாள்  ஒன்று மற்றும்   20 ரூபா  நாணயத்தாள்கள்  இரண்டு என்பன சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவம் குறித்து மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    2