Paristamil Navigation Paristamil advert login

கனடா செல்ல முடியாத விரக்தி - யாழில் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு

கனடா செல்ல முடியாத விரக்தி - யாழில் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு

16 ஆடி 2025 புதன் 17:36 | பார்வைகள் : 2989


கனடா நாட்டுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெருந்தொகை பணத்தினை கொடுத்து ஏமாற்றமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த செல்வராசா பாஸ்கரன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முகவர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபா பணத்தினை வழங்கியுள்ளார்

இரண்டு வருட காலமாக கனடாவுக்கு அனுப்பாமல் முகவர் தொடர்ந்து ஏமாற்றி வந்தமையால், பணத்தை மீள தருமாறு முகவருடன் விவாதித்து வந்துள்ளார். அதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தனது பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கம் புரிந்த நிலையில், பணத்தை முகவர் கொடுக்க மறுத்தமையால், விரக்தியில் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.

அதனை அவதானித்த வீட்டார், அவரை மீட்டு புங்குடுதீவு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

1 நாள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : -

இறப்பு : 17 Aug 2026