பூரனின் அணியை நொறுக்கிய மேக்ஸ்வெலின் படை-ருத்ர தாண்டவமாடிய வீரர்
22 ஆனி 2025 ஞாயிறு 15:07 | பார்வைகள் : 5819
டல்லாஸில் நடந்த மேஜர் லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் எம்.ஐ நியூயார்க்கை வீழ்த்தியது.
கிராண்ட் ப்ரைரி மைதானத்தில் நடந்த போட்டியில் எம்.ஐ நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய நியூயார்க் அணியில் மோனக் படேல் மற்றும் டி காக் கூட்டணி 70 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
மோனக் படேல் 32 (20) ஓட்டங்களில் வெளியேற, அரைசதம் விளாசிய டி காக் 55 (34) ஓட்டங்களில் ஹொலண்ட் ஓவரில் அவுட் ஆனார்.
அதன் பின்னர் வந்த அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) நிதானமாக ஆட, மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடி காட்டினார்.
பூரன் 33 (30) ஓட்டங்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, போலார்ட் 9 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
எனினும் பிரேஸ்வெல் 24 பந்துகளில் 42 ஓட்டங்கள் விளாச, நியூயார்க் 188 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய வாஷிங்டன் அணியில் ரச்சின் ரவீந்திரா (10), கோஸ் (14) சொதப்ப மிட்செல் ஓவன் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அவருடன் கைகோர்த்த ஜேக் எட்வார்ட்ஸும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் விரைவாக உயர்ந்தது.
அரைசதம் விளாசிய ஓவன், 26 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
30 ஓட்டங்களில் இருந்த எட்வார்ட்ஸ் வெளியேற, அணித்தலைவர் மேக்ஸ்வெல் மிரட்டலாக 5 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 16 ஓட்டங்கள் விளாசினார்.
எனினும், மார்க் சாப்மேன் (Mark Chapman) கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாச, வாஷிங்டன் அணி 189 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire