அஜித்தின் அடுத்த படத்தோற்றம் இதுவா ?
24 ஆனி 2025 செவ்வாய் 18:06 | பார்வைகள் : 3394
நடிகர் அஜித்குமார் மொட்டைத் தலையுடன் இருக்கும் புதிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படம் வெளியானதையடுத்து, அவரது அடுத்த படத்திற்கான 'லுக் டெஸ்ட்' முடிந்துவிட்டதா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில், அவர் சில வித்தியாசமான தோற்றங்களில் படம் முழுவதும் வந்தார். அந்த தோற்றங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையில், அஜித்தின் மொட்டைத்தலையுடன் கூடிய புதிய புகைப்படம் வைரலாகி வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் தற்செயலாக தன்னுடைய தோற்றத்தை மாற்றியிருக்கிறாரா அல்லது அடுத்த படத்திற்கான கெட்டப்பா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து அஜித்தோ அல்லது அவரது மேலாளரோ எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire