சமந்தாவை சந்தித்த கீர்த்தி சுரேஷ்.. என்ன விசேஷம்?..
29 ஆனி 2025 ஞாயிறு 12:26 | பார்வைகள் : 3808
நடிகை சமந்தா, விஜய் தேவர கொண்டவுடன் நடித்த குஷி படத்திற்கு பிறகு தெலுங்கில் தான் தயாரித்திருந்த சுபம் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அடுத்து மா இண்டி பங்காரம் என்ற படத்தை தயாரித்து, கதையின் நாயகியாக நடிக்கப் போகிறார். இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கும் ஒரு ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார் சமந்தா. இதற்கிடையில் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரை சமந்தா காதலிப்பதாக தொடர்ந்து சோசியல் மீடியாவில் பரபரப்பு செய்தி வெளியாகி கொண்டு வருகிறது. என்றாலும் அவர் இது குறித்து எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் சமந்தா, தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் தான் சந்தித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதோடு, நாம் எதைப் பற்றி பேச தேர்வு செய்கிறோமோ, அதுவே நாம் வடிவமைக்கும் பொருளாக மாறுகிறது என்றும் ஒரு பதிவு போட்டு உள்ளார் சமந்தா.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire