காரசாரமான மட்டன் தலைக்கறி மசாலா
29 ஆனி 2025 ஞாயிறு 13:26 | பார்வைகள் : 4537
உங்களுக்கு அசைவம் என்றாலே மட்டன் தான் விருப்பமான உணவு எனில் அதன் அனைத்து பாகங்களையும் நிச்சயம் விரும்பி சாப்பிடுவீர்கள். அந்தவகையில் மட்டன் தலைக்கறியை ஒரு முறை இப்படி பெப்பர் தூக்கலாக ஃபிரை பண்ணி சமைச்சு பாருங்க. சாதத்திற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தலைக்கறி – ½ கிலோ
வெங்காயம் – 2
தொடர்புடைய செய்தி
சின்ன வெங்காயம் - 15
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 7 பற்கள்
சோம்பு – 1 tsp
சீரகம் – 1 tsp
மிளகு – 2 tsp
கிராம்பு – 2
எண்ணெய் – 2 tbsp
பட்டை – 1 துண்டு
ஸ்டார் பூ – 1
மஞ்சள் தூள் – ½ tsp
மிளகாய் தூள் – 1 tbsp
மட்டன் மசாலா – 1 ½ tbsp
கறிவேப்பிலை கொத்தமல்லி – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :
குக்கரில் கறியை நன்கு கிளீன் செய்து சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதோடு சீரகம் , வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வையுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, சோம்பு, சீரகம், மிளகு, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். வதங்கியதும் அதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது வேக வைத்த மட்டன் தலைக்கறியில் இருக்கும் எலும்புகளை நீக்கிவிட்டு கறியை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.
பின் அரைத்த பேஸ்ட் விழுதை சேர்த்து கலந்துவிட்டு மிளகாய் தூள், மட்டன் மசாலா சேர்த்து கலந்துவிடுங்கள்.
இப்போது வேக வைத்த மட்டன் பீசுகளை தண்ணீரோடு சேர்த்து கலந்துவிட்டு போதுமான அளவு உப்பு சேர்க்கவும்.
பின் மூடி போட்டு 10 நிமிடங்கள் வேக வைத்து திறந்தால் ருசியான தலைக்கறி வருவல் தயார்.
அதன் மேல் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire