அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம்
6 ஆவணி 2025 புதன் 16:09 | பார்வைகள் : 3137
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுதியானது இன்று முறையே 297.10 ரூபாவாகவும், 304.61 ரூபாவாகவும் காணப்படுகிறது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 297.21 ரூபாவாகவும், 304.71 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், ஏனைய பல நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி இன்று வீழ்ச்சி கண்டுள்ளது.
அதேநேர், வளைகுடா நாடுகளின் நாணயங்களுக்கு நிகராக அதன் பெறுமதி உயர்ந்துள்ளது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire