இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி இது: தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
12 ஆவணி 2025 செவ்வாய் 14:53 | பார்வைகள் : 2567
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை, சென்னையில் மாற்றுத்திறனாளி வீட்டிற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 12) தொடங்கி வைத்தார்.
இத்திட்டமானது மாதத்தின் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுத்தப்படும்முன்னதாக, இந்த திட்டம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது:
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில், என்னுடைய மனசுக்கு பிடிச்ச திட்டமா, உருவாகி இருப்பது தான் தாயுமானவர் திட்டம். கூட்டுறவுத் துறை சார்பில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குகிற தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முன்மாதிரி முயற்சி
இப்படி அரசின் சேவைகளை மக்களின் வீடுகளுக்கே சென்று போய் கொடுப்பது இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி. ஒரு திட்டத்தை அறிவிப்பதுடன் கடமை முடிந்து விடுவதாக நாம் நினைப்பதில்லை. அந்தத் திட்டத்தின் பலன், பயன் கடைக்கோடி மனிதரையும் சென்று சேர்ந்ததா, என்று கண்காணிப்பதையும் கடமையாக நினைக்கிறேன்.
சிரமத்தை உணர்ந்து...!
அப்படி வயது முதிர்ந்தோறும், மாற்றுத் திறனாளிகளும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சிரமத்தை உணர்ந்து இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்தத் திட்டத்தை 34 ஆயிரத்து 809 நியாய விலை கடைகளில் செயல்படுத்த போகிறோம். 70 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சத்து 42 ஆயிரத்து 980 பேர், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21 லட்சத்தி 70 ஆயிரத்து 454 பேர் இந்தத் திட்டத்தால் பயனடைய போகிறார்கள்.
உயிர் காக்கும் கடமை
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்து விடும். இதற்காக கூட்டுறவுத்துறைக்கு ஆகப் போகிற ரூ. 30 கோடியே 16 லட்சம் ரூபாயை கூடுதல் செலவாக கருதாமல் மக்களுக்கு செய்கிற உயிர் காக்கும் கடமையாக நாங்கள் நினைக்கிறோம். இது கூட்டுறவு துறையின் மிகப்பெரிய சேவை. அந்த துறை அதிகாரிகள், அலுவலர்கள், கடை விற்பனையாளர்கள் செய்யப் போகிற மிகப் பெரிய கடமை.
பட்டினி சாவு இல்லாத மாநிலம்
தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்து 328 நியாய விலை கடைகள் இருக்கிறது. இதில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 2,394 புதிய நியாய விலை கடைகளை திறந்து இருக்கிறோம். கருணாநிதி வழியில் இந்த நியாய விலை கடைகளை நாங்கள் முறையாக சிறப்பாக நடத்துகிற காரணத்தினால் தான் தமிழகம் இன்று பட்டினி சாவு இல்லாத மாநிலமாக இருக்கிறது. இந்த ரேஷன் கடைகளின் பயன்பாட்டை இன்னும் எளிமையாக முயற்சி எடுத்து இருக்கிறோம்.
வேண்டுகோள்
இந்த நேரத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு நான் வைக்கிற வேண்டுகோள் என்பது இந்த திட்டத்தின் நோக்கம் 100 விழுக்காடு நிறைவேறுகிற வகையில் உங்கள் பணி அமையும். உங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மனம் குளிர வகையில் நீங்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாங்குகிற நல்ல பெயர் தான் ஆட்சிக்கு கிடைக்கிற பாராட்டு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire