Paristamil Navigation Paristamil advert login

கவிதை யாதெனில்

கவிதை யாதெனில்

13 ஆவணி 2025 புதன் 18:19 | பார்வைகள் : 4599


இனிய தமிழின் பறைச் சாற்றும் பெருமை யது கவிதை

உள்ளத்தின் உணர்வுகளுக்கு வண்ணம் தீட்டுவது கவிதை

 

எதுகை மோனையுடன் அடி தளை சேர்ந்து

இதம்தரும் வீணை இசையது கவிதை

 

வாழ்க்கை நெறிகளை வரிகளாய் செதுக்குவது கவிதை

உடலை மறைத்து விட்டு உள்ளத்துயிரை அணைப்பது கவிதை

 

மண் வாசந்தனை செவிவழி யுணர்த்துவது கவிதை

புத்துயிர் இயற்கையின் வற்றாத ஊற்று ஒரு கவிதை

 

சொக்கும் விழியின் பக்குவமறிந்து

விக்கும் தொண்டையின் ஆர்வம் தெரிந்து

 

நடுங்கும் கரத்தின் நளினம் புரிந்து

சிவக்கும் கன்னத்தின் வெட்கம் சுவைத்து

 

வாடும் உதட்டை பதமும் உழுது

பொங்கும் உள்ளத்தில் தங்கும் இந்த கவிதை…