நம் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள்... ராஜ வாழ்க்கை!: பாகிஸ்தானில் கொடிகட்டிப் பறப்பது அம்பலம்
20 ஆடி 2025 ஞாயிறு 11:25 | பார்வைகள் : 3613
உலகளவில் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஏழு பேர், நம் அண்டை நாடான பாகிஸ்தானில், அந்நாட்டு ராணுவத்தின் முழு பாதுகாப்போடு சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர் நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற இவர்கள், எந்த பயமுமின்றி ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
நம் அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட, அந்நாட்டின் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.
இவர்களுக்கு ஆயுதங்களை வழங்கும் பாக்., ராணுவத்தினர், நிதியுதவியும் அளித்து வருகின்றனர். மேலும், பயங்கரவாதிகளுக்கு ராணுவ பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச எல்லை வழியாக நம் நாட்டுக்குள் ஊடுருவும் பாக்., பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு இடங்களில் நாசவேலைகளில் ஈடுபடுவதோடு, ஹிந்துக்களை குறிவைத்து தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்., 22ல், பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான டி.ஆர்.எப்., எனப்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்த ஏப்., 22ல், பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான டி.ஆர்.எப்., எனப்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்' பொறுப்பேற்றது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்நிலையில், நம் நாடு மற்றும் வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்ற, உலகின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஏழு பேர், பாகிஸ்தானில் ஆயுதமேந்திய பாதுகாப்புடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
யார் அவர்கள்?
ஹபீஸ் சயீத்
லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீத், நம் நாட்டில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டவர். கடந்த, 2006ல், மஹாராஷ்டிராவின் மும்பையில் பயணியர் ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பு, 2008 மும்பை தாக்குதல் சம்பவங்கள் இதில் அடங்கும்.
இந்த இரண்டு தாக்குதல்களில் மட்டும் 360க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், 2000ம் ஆண்டில், தலைநகர் டில்லியில் உள்ள செங்கோட்டையையும், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் தாக்கினர். இந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத், அமெரிக்கா மற்றும் ஐ.நா., சபையால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 86 கோடி ரூபாய் சன்மானம் தரப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில், உச்சபட்ச பாதுகாப்புடன் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஆடம்பரமாக
வாழ்கிறார்.
ஜாகியுர் ரெஹ்மான் லக்வி
முஸ்லிம் மத போதகரான ஜாகியுர் ரெஹ்மான் லக்வி, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவர். 2008 மும்பை தாக்குதலுக்கு 'ஸ்கெட்ச்' போட்டு கொடுத்தவரும் இவர் தான். பாக்., சிறையில் சிறிது காலம் இருந்த அவர், பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
தற்போது மற்ற பயங்கரவாதிகளை போல ஜாகியுர் ரெஹ்மான் லக்வியும் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார். இவருக்கு பாக்., ராணுவம் மற்றும் சீனாவின் பாதுகாப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
சையத் சலாவுதீன்
ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவரான இவர், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர்
பகுதியில், நம் நாட்டுக்கு எதிராக பேரணிகளை நடத்தி வருகிறார்.
தாவூத் இப்ராஹிம்
நிழல் உலக தாதா என அறியப்படும் தாவூத் இப்ராஹிம், உலகின் மிகவும் தேடப்படும்
பயங்கரவாதிகளில் ஒருவர். கொலை, மிரட்டி பணம் பறித்தல், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத வழக்குகளில் இவர் தேடப்படுகிறார். மும்பை குண்டுவெடிப்பு
சம்பவத்தில் இவருக்கு தொடர்புள்ளது.
சர்வதேச பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிம் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, 200 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அவர், அந்நாட்டின் ஆயுதப்படைகளின் பாதுகாப்பின் கீழ், எந்தவித பாதிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
மசூத் அசார்
ஜெய்ஷ்- இ-முஹமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசார், பாக்., ராணுவத்தின்
பலத்த பாதுகாப்போடு வாழ்ந்து வருகிறார். ஜம்மு - காஷ்மீரின் உரி, புல்வாமா பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்தியவர் இவர்.
இந்த தாக்குதல்களில், நம் பாதுகாப்பு படை வீரர்கள் 60 பேர் வீரமரணம் அடைந்தனர். ஐ.நா., சபையால், 2019ல், சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசார் அறிவிக்கப்பட்டார். அவரை கைது
செய்வதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
ஆனால், தங்கள் நாட்டில் மசூத் அசார் இல்லை என, பாக்., பொய் கூறி வருகிறது. பாகிஸ்தானின்
பஹவல்பூரில் இருந்து மசூத் அசார் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக, உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையில் தாக்கப்பட்ட பயங்கர வாத முகாம்களில் இதுவும் ஒன்று.
இவர்களை தவிர, இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இக்பால் பட்கல், அவரது சகோதரர் ரியாஸ் பட்கல் ஆகியோரும் கராச்சியில் உள்ளனர். இவர்கள், நம் நாட்டில் 'ஸ்லீப்பர் செல்'களை ஒருங்கிணைக்கின்றனர். இவர்களை போல, பல்வேறு பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். நம் நாட்டின் அமைதியை கெடுப்பதே இவர்களின் நோக்கம். பாக்., புகலிடம் கொடுக்கும் வரை அவர்களின் நாசவேலை தொடரும். பாக்., திருந்தினால் தான், பயங்கரவாதிகளின் ஆட்டம் அடங்கும். ஆனால் பாகிஸ்தானும் திருந்தப் போவதில்லை; பயங்கரவாதிகளும் அடங்கப் போவதில்லை. நம் படைகளும் அவர்களை விட்டு வைக்கப் போவதில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire