அடுத்த துணை ஜனாதிபதி நிதிஷ் குமார்?
23 ஆடி 2025 புதன் 09:57 | பார்வைகள் : 5539
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரின் திடீர் ராஜினாமா டில்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று முன்தினம் மதியம் வரை ராஜ்யசபா அலுவல்களில் ஆர்வம் காட்டி வந்த தன்கர், திடீரென இந்த முடிவை எடுக்க என்ன காரணம்? இடைப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் என்ன நடந்தது? என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இதற்கிடையே, அடுத்த துணை ஜனாதிபதியாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன. சரியாக, 13 நாட்களுக்கு முன், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்தீப் தன்கர், '2027 ஆகஸ்ட் வரை துணை ஜனாதிபதி பதவியில் தொடர்வேன்' என தெரிவித்திருந்தார்.
ஆனால், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அந்த முடிவில் இருந்து விலகி, திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தது, டில்லி அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தன்கருக்கு இதய நோய் இருப்பது உண்மையே. ஆனால், திடீரென ராஜினாமா செய்யும் அளவுக்கு அவரது மனம் மாறியதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன.
காரணம் 1
பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை அடுத்த துணை ஜனாதிபதியாக பதவியில் அமரவைக்க பா.ஜ., காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதியில் பீஹார் சட்டசபைக்கு தேர்தல் வருவதால், தங்கள் கட்சி வேட்பாளரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. இந்த நகர்வால் நிதிஷ் குமார் உடனான உறவு கசந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அவரை துணை ஜனாதிபதி பதவியில் அமரவைத்து அழகு பார்க்க பா.ஜ., முயல்வதாக கூறப்படுகிறது.
அதை உறுதிபடுத்துவது போல பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிபூஷண் தாகூரின் பேட்டியும் அமைந்திருக்கிறது. “துணை ஜனாதிபதியாக நிதிஷ் குமார் நியமிக்கப்பட்டால் பீஹாருக்கு நிச்சயம் நல்லது நடக்கும்,” என அவர் பேசியிருப்பது எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றி இருக்கிறது.
காரணம் 2
நேற்று முன்தினம் நடந்த ராஜ்யசபா அலுவல் ஆய்வுக் குழுவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்காமல், தன்கரை அவமதித்ததே இரண்டாவது காரணமாக கூறப்படுகிறது.
பணமூட்டை சிக்கிய விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்குவதற்கு, எதிர்க்கட்சிகளை சேர்ந்த 68 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு தன்னிடம் நோட்டீஸ் வழங்கியதாக தன்கர் கூறியிருந்தார்.
ஒருவேளை எதிர்க்கட்சிகள் கொடுத்த நோட்டீஸின் அடிப்படையில், தன்கர் முடிவெடுத்திருந்தால், இந்த விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் தீர்மானம் கொண்டு வர எண்ணியிருந்த மத்திய அரசுக்கு கவுரவ குறைச்சலாக மாறியிருக்கும்.
எனவே, தன்கர் கூட்டிய ராஜ்யசபாவின் முக்கியமான அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல், மத்திய அமைச்சர்கள் நட்டாவும், கிரண் ரிஜிஜுவும் புறக்கணித்தனர்.
தவிர, ஆய்வுக் கூட்டம் முடிந்த பின், மிக மிக முக்கியமான இடத்திலிருந்து, ஜக்தீப் தன்கருக்கு போன் வந்ததாக தெரிகிறது. அப்போது நடந்த உரையாடல், சற்று காரசாரமாக இருந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, ஆளும் தரப்பு ஆதரவுடன், ஜக்தீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானமே கொண்டு வரும் அளவுக்கு அடுத்தடுத்த ஆலோசனைகள் தீவிரமடையத் துவங்கியதாக கூறப்படுகிறது.
இதை கேள்விப்பட்ட ஜக்தீப் தன்கர், தனக்கான சூழ்நிலைகள் மாறுவதை, சற்றும் எதிர்பார்க்கவில்லை. பதவிநீக்கம் என்ற நிலைமைக்கு செல்லும் வரை காத்திருக்காமல், ராஜினாமா செய்துவிடும் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
மேலும், ராஜ்யசபா கூடியபோது, ஆப்பரேஷன் சிந்துார் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது, சபை குறிப்பில் தான் கூறுவது மட்டுமே பதிவாகும் என நட்டா பேசியதும், சபை தலைவர் என்ற முறையில் தன்கரை புண்படுத்தியதாக கூறப்படுகிறது.
காரணம் 3
தன்கர் சமீபகாலமாக, நீதித்துறை மீது விமர்சனங்களை முன்வைத்து வந்த தும் ஆட்சியாளர்களை அதி ருப்தியில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. தான் ஓரங்கட்டப்படுவதை உணர்ந்த தன்கர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
ராஜினாமா ஏற்பு தன்கரின் ராஜினாமாவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதை உள்துறை அமைச்சகமும் அரசிதழில் வெளியிட்டது. ஜக்தீப் தன்கர் இனி மீண்டும் பார்லிமென்ட்டிற்கு வர வாய்ப்பில்லை. ஓய்வு பெறும்போது, பிரிவு உபசார உரை நிகழ்த்துவது வழக்கம்; எம்.பி.,க்களும், வாழ்த்திப் பேசுவது வழக்கம். ஜக்தீப் தன்கர், பார்லிமென்ட்டுக்கு நேற்று வரவில்லை. எனவே, ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், அவர் மீண்டும் பார்லிமென்ட் வருவது சந்தேகமே. எனவே, பிரிவு உபசார உரை நிகழ்த்தவும், அவரை வழியனுப்பி வைக்கும் வகையில், எம்.பி.,க்கள் வாழ்த்தி பேசுவதற்கும் இனி வாய்ப்பில்லை.
துணை ஜனாதிபதி உட்பட பல்வேறு பதவிகளில் நம் நாட்டிற்கு சேவை செய்ய ஜக்தீப் தன்கருக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். -நரேந்திர மோடி, பிரதமர்
மகிழ்ச்சி! அடுத்த துணை ஜனாதிபதி குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். பீஹாரைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் எனக்கு மகிழ்ச்சி. பிரேம் குமார் பீஹார் அமைச்சர், பா.ஜ.,
ராஜினாமா ஏற்பு
தன்கரின் ராஜினாமாவை, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதை உள்துறை அமைச்சகமும் அரசிதழில் வெளியிட்டது. ஜக்தீப் தன்கர் இனி மீண்டும் பார்லிமென்ட்டிற்கு வர வாய்ப்பில்லை. ஓய்வு பெறும்போது, பிரிவு உபசார உரை நிகழ்த்துவது வழக்கம்; எம்.பி.,க்களும், வாழ்த்திப் பேசுவது வழக்கம். ஜக்தீப் தன்கர், பார்லிமென்ட்டுக்கு நேற்று வரவில்லை. எனவே, ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், அவர் மீண்டும் பார்லிமென்ட் வருவது சந்தேகமே. எனவே, பிரிவு உபசார உரை நிகழ்த்தவும், அவரை வழியனுப்பி வைக்கும் வகையில், எம்.பி.,க்கள் வாழ்த்தி பேசுவதற்கும் இனி வாய்ப்பில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire