ஜேசன் சஞ்சய் முதல் படம் சிக்கலில்?
4 புரட்டாசி 2025 வியாழன் 17:57 | பார்வைகள் : 5391
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை தளபதி என்று ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் சினிமாவில் நடிகர்களின் வாரிசுகளும் களமிறங்கி வெற்றி கண்டு வரும் நிலையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
அதன்படி இவர் இயக்கும் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த பல மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
அதே சமயம் படத்தின் மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது. ஆனால் சமீபகாலமாக இப்படம் தொடர்பான எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் படப்பிடிப்பை தொடர இன்னும் ரூ.8 கோடி தேவைப்படுகிறது என்பதால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். இந்த 8 கோடி ரூபாய், கொடுக்கப்பட்ட பட்ஜெட்டை தாண்டி விட்டதா? அல்லது ஆரம்பத்திலேயே பட்ஜெட் குறைவாக கொடுக்கப்பட்டதா? என்பது போன்ற உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படமே இப்படி சிக்கலில் சிக்கி விட்டதே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire