செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 2,000க்கும் மேற்பட்டோர் ராஜினாமா
8 புரட்டாசி 2025 திங்கள் 04:06 | பார்வைகள் : 2727
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகினர்.
அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அமைப்பு செயலர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச்செயலர் பதவிகளை பறித்து, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து, கோபியில் உள்ள செங்கோட்டையனின் பண்ணை வீடு முன்பாக, அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்படியெல்லாம் செய்யக் கூடாது என, செங்கோட்டையன் சமாதானப்படுத்தியும் ஆதரவாளர்கள் கோஷத்தை குறைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று மாலை, செங்கோட்டையனை சந்தித்த அவருடைய ஆதரவாளர்கள் பலரும், தங்களது கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை அவரிடம் வழங்கினர். கூடவே, தங்களுடைய உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் எழுதி, அதை செங்கோட்டையனிடமே வழங்கினர்.
அதேபோல, செங்கோட்டையன் ஆதரவாளர்களாக இருக்கும், ஈரோடு மாவட்ட ஒன்றிய, நகர, இணை அணி நிர்வாகிகளும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை செங்கோட்டையனிடம் அளித்துள்ளனர்.
இப்படி நேற்று மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் அக்கட்சியில் இருந்து விலகி, அதற்கான கடிதங்களை செங்கோட்டையனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire