எப்படிப்பட்ட நீதிபதி நீங்கள்?' இண்டி கூட்டணியின் வேட்பாளருக்கு பா.ஜ., கேள்வி
9 புரட்டாசி 2025 செவ்வாய் 10:41 | பார்வைகள் : 2402
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை, 'இண்டி' கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி சந்தித்த நிலையில், 'எப்படிப்பட்ட நீதிபதி நீங்கள்?' என, அவருக்கு பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர், 74, கடந்த ஜூலை இறுதியில் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய, இன்று தேர்தல் நடக்கிறது.
இதில், மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணி சார்பில், தமிழகத்தைச் சேர்ந்த மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், தி.மு.க., - காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி சார்பில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர்.
லோக்சபா, ராஜ்யசபாவில் தே.ஜ., கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ள நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதி. எனினும், அவருக்கு நெருக்கடி கொடுக்க, வேட்பாளரை இண்டி கூட்டணி நிறுத்தி உள்ளது.
அக்கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, அனைத்து கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.
அந்த வகையில், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவை, பாட்னாவில் சமீபத்தில் சுதர்சன் ரெட்டி சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படத்தை, சமூக வலைதளத்தில் லாலு பிரசாத் யாதவ் பகிர்ந்தார்.
இந்த சந்திப்பு குறித்து, லோக்சபா பா.ஜ., - எம்.பி., ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது:
கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, ஜாமினில் வெளியில் உள்ள லாலு பிரசாத் யாதவை, இண்டி கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி சந்தித்துள்ளார். எப்படிப்பட்ட நீதிபதி அவர்?
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நபரை எப்படி சந்திக்கலாம்? இது பாசாங்குத்தனம். தயவு செய்து நாட்டின் ஆன்மா பற்றி அவர் பேச வேண்டாம்; அவரது போலி முகம் அம்பலமாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire