செம்மணி தொடர்பில் அமெரிக்காவிலிருந்து எழுப்பப்பட்ட குரல்
17 புரட்டாசி 2025 புதன் 13:05 | பார்வைகள் : 3212
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், செம்மணி மனிதப்புதைகுழியில் 140 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமன்றி குழந்தையின் பால்போத்தல், பாடசாலை புத்தகப்பை, பொம்மைகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் நீதி கோரிக்கைகளை வலுப்படுத்துவதாகவும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் நாம் தொடர்ந்து சுயாதீன விசாரணையை வலியுறுத்த வேண்டும். அதுவே நீதி நோக்கி நகரும் பாதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் டெபோரா ரோஸ் ஆகியோரும் தமது எக்ஸ் தளப்பதிவுகள் ஊடாக செம்மணி தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire