புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் நம் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்: விஜய் கட்சி பற்றி பேசிய இபிஎஸ்
21 ஆவணி 2025 வியாழன் 10:21 | பார்வைகள் : 3177
இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் நம் தலைவரைப் போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டிய நிலை இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை, சோளிங்கர் தொகுதிகளையடுத்து அரக்கோணம் காந்தி சாலையில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் இபிஎஸ் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கனவு காண்கிறார். அரக்கோணத்தை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், இந்த கூட்டமே வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு அடித்தளம். திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதம் முடிந்துவிட்டது.
அரக்கோணத்துக்கு ஏதாவது பெரிய திட்டம் கொண்டுவந்தார்களா? தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டுவிட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் சிலவற்றைச் சொல்கிறேன்.
போட்டோ ஷூட்
நீட் தேர்வு ரத்து செய்வதுதான் எங்கள் ஆட்சியின் முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார் உதயநிதி. அரக்கோணத்திலாவது உங்கள் ரகசியத்தைச் சொல்லுங்கள். ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார், போட்டோ ஷூட் எடுப்பார், குழு போடுவார். அவ்வளவுதான்.சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போனது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் போற்றப்பட்ட தமிழக போலீசார் இப்போது ஏவல்துறையாக மாறிவிட்டனர். இன்று இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கிறது.
புதிதாக கட்சி
எங்காவது போலீசார் இருக்கிறார்களா? இதுவே ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு 2 ஆயிரம் போலீசாரை நிறுத்துகிறார்கள். ஏனென்றால், ஸ்டலினுக்கு மக்கள் கூட்டம் வராது.
இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் நம் தலைவரைப் போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படி நம் தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தனர். ஆக வரும் தேர்தல் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற நல்லாதரவை தரவேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் ஸ்டாலின் வந்திருக்கிறார். வீடுவீடாக அதிகாரிகள் வருகிறார்கள்.
இரட்டை இலை
மக்களிடம் இருக்கும் 46 பிரச்னை பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். நடக்குமா… இவை எல்லாம் நாடகம்தானே? 46 பிரச்னை மக்களுக்கு இருக்கிறது என்று முதல்வரே ஒப்புக்கொள்கிறார். இதேபோல்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது புகார் பெட்டி திட்டம் கொண்டுவந்து மனு வாங்கினார். தீர்வு காணப்படும் என்றார், தீர்வு காணப்படாவிட்டால் கோட்டையில் கதவு திறந்திருக்கும், என்னை வந்து சந்திக்கலாம் என்றார், சந்தித்தாரா? அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire