செம்மணி மனித புதைகுழியில் மீண்டும் சிறார்களின் எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு
27 ஆவணி 2025 புதன் 17:49 | பார்வைகள் : 3291
செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிறார்களினது என நம்பப்படும் எலும்புக்கூட்டு தொகுதிகள் உள்ளிட்ட 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 03 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (26) அகழ்வாய்வு தளங்களை மேலும் விஸ்தரிக்கும் நடவடிக்கைகளின் போது புதிதாக 16 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை மேலும் 03 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை நேற்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதிகளில் 08 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்று 35 ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 43 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டு தொகுதியுடன் 158 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இதுவரையில் 169 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire