யாழில் வயோதிபப் பெண் எடுத்த விபரீத முடிவு
11 ஐப்பசி 2025 சனி 10:55 | பார்வைகள் : 4805
யாழில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை (10) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் - சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வயோதிப பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தெள்ளிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கொடுத்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக வீட்டில் வைத்து உட்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire