2 நாட்களில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: 16 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
15 ஐப்பசி 2025 புதன் 06:35 | பார்வைகள் : 2276
2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இன்று (அக் 14) 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 16 மாவட்டங்களில் இன்று (அக் 14) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் நாளை (அக் 15) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 18 மாவட்டங்களில் நாளை மறுநாள் அக் 16ம் தேதி ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை 2 நாட்களில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ''தென் இந்தியாவில் அடுத்த 48 மணி நேரத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கும்.
ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவமழை விலகியது. அடுத்த 2 நாட்களில் தென் மேற்கு பருவமழை இந்தியாவின் எஞ்சிய பகுதிகளில் இருந்து முழுமையாக விலகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire