சட்டசபையில் நயினாருக்கு இன்ப அதிர்ச்சி: புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
17 ஐப்பசி 2025 வெள்ளி 12:30 | பார்வைகள் : 2239
வெளிநடப்பு செய்யும் போது கூட சிரித்து கொண்டே, யாருக்கும் எந்த வித கோபம் வராத வகையில் அணுக கூடியவர் என பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
சட்டசபையில் பேசும் போது தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பாஜ தலைவராக பொறுப்பு ஏற்று இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு இன்று பிறந்த நாள். அவரை பொறுத்தவரை கட்சி பாகுபாடுயின்றி அனைவர் இடத்திலும் அன்போடு, அமைதியோடு பேசக்கூடியவர். அவர் கோபமாக பேசி நான் இதுவரை பார்த்தது இல்லை.
எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்கும் வகையில் செயல்படும் போலீசார்; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் வரிசையில் இருந்தாலும், அவர் விமர்சனங்களை செய்யும் போது கூட பொறுமையாக, அமைதியாக தான் பேசுவார். வெளிநடப்பு செய்யும் போது கூட சிரித்து கொண்டே, யாருக்கும் எந்த வித கோபம் வராத வகையில் அணுக கூடியவர். ஆகவே அப்படிப்பட்ட சிறந்த அரசியல்வாதியாக விளங்கி கொண்டு இருக்க கூடியவர். 64 முடிந்து 65 வயது வயதில் அடியெடுத்து வைத்து இருக்கிறார்.
அவருக்கு என்னுடைய சார்பில், திமுக எம்எல்ஏக்கள் சார்பில், வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எங்களது அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் முத்துசாமிக்கும் இன்று பிறந்த நாள். அவருக்கும் என்னுடை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். சட்டசபை சார்பில் இருவருக்கும் (நயினார் நாகேந்திரன், முத்துசாமி) பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire