பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைபடமாக உருவாகிறதா?
18 புரட்டாசி 2025 வியாழன் 15:48 | பார்வைகள் : 5074
பிரதமர் நரேந்திர மோடி குழந்தை பருவம் முதல் தேசியத் தலைவராக உருவெடுத்தது வரையிலான அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ‘மா வந்தே’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் ஹீராபென் இருவருக்கும் உள்ள ஆழமான பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் உருவாக இருக்கிறது. படக் குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், “ஒரு தாயின் துணிவு பல போர்களை வெல்லும்” எனும் பிரதமர் மோடியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
தனது திரை பயணத்தை தமிழ் படத்தில் துவங்கி பின்னர் மலையாள திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர், இந்தப் படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் கிராந்தி குமார் இயக்கத்தில், கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையில், பாகுபலி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கே.கே. செந்தில் கேமராமேனாக பணியாற்ற உள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் மா வந்தே ஆங்கிலத்திலும் வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் உலக அளவில் இந்தப் படம் கொண்டு செல்லப்படும்.
தமிழில் சீடன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான மலையாள நடிகர் உன்னி முகுந்தன், மா வந்தே படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire