இலங்கை முழுவதும் சுற்றிவளைப்பு – 5000 இற்கும் மேற்பட்டோர் கைது
22 புரட்டாசி 2025 திங்கள் 14:55 | பார்வைகள் : 3345
நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 5,688 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 658 பேரும், சந்தேகத்தின் பேரில் 23 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 305 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 188 பேரும், மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 44 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 19 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4451 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire