பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் சமயோசிதம்...
23 புரட்டாசி 2025 செவ்வாய் 10:23 | பார்வைகள் : 2874
தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை தக்கவைக்கவும், கட்சியை காப்பாற்றவும், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள், சொந்த சின்னத்தில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளன. பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டதால், தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழந்த கட்சிகளை பார்த்து, இந்த சமயோசித முடிவுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - தே.மு.தி.க., - ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 12 கட்சி கள், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இவை தவிர்த்து, தேர்தல் கமிஷனில் பதிவு செய்து, அங்கீ காரம் பெறாத 295 கட்சிகள் உள்ளன.
இந்த கட்சிகள், தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளை பெறும் போது, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படும். மாநில கட்சியாக அங்கீகாரம் பெற, நான்கு விதிமுறைகளை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது.
அதன்படி, சட்டசபை தேர்தலில், மொத்த தொகுதிகளில், 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் உள்ள தொகு திகளில், ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும். லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில், 6 சதவீத ஓட்டுகளுடன், ஒரு லோக்சபா அல்லது இரண்டு சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டால், 8 சதவீத ஓட்டுகளையாவது அக்கட்சி பெற்றிருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு விதிமுறையை பூர்த்தி செய்யும்பட்சத்தில், அந்த கட்சிக்கு, மாநில கட்சியாக தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கும்.
இந்த விதிமுறையின்படி, நடப்பாண்டு விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு, அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாடு முழுதும் ஆறு தேர்தல்களில் தனி சின்னத்தில் போட்டியிடாத மற்றும் தேர்தல் செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாத 475 கட்சிகளின் பதிவை, தேர்தல் கமிஷன் சமீபத்தில் ரத்து செய்துள்ளது.
அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த கொ.ம.தே.க., - ம.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் கமிஷனின் பதிவை இழந்துள்ளன. இந்த பட்டியலில் உள்ள சில கட்சிகள், முந்தைய தேர்தல்களில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டுள்ளன.
ஆனால், தனி சின்னத்தில் போட்டியிடாமல், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சி களின் சின்னத்தில் போட்டியிட்டன.
தனி சின்னத்தில் போட்டியிடாமல், பெரிய கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்ததால், தேர்தல் கமிஷனின் பதிவு ரத்தாகியுள்ளது. இதனால், பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள், சின்னமே இல்லாமல் அங்கீகாரம் ரத்தான கட்சிகளை கண்டு, உஷார் அடைந்து உள்ளன.
தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில், பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடாமல், தனி சின்னம் பெற்று போட்டியிட்டு, கட்சியை காப்பாற்றும் சமயோசித முடிவுக்கு வந்துள்ளன.
கூட்டணி கட்சிகளை தங்கள் சின்னத்தில் போட்டியிட வைத்து, தங்களது வெற்றி கணக்கை உயர்த்தி காட்டும் தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகளுக்கு, இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், தனி சின்னத்தில் போட்டியிட சிறிய கட்சிகளை அனுமதித்தால், அவற்றின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்பதால், பெரிய கட்சிகள் கவலை அடைந்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire