மீண்டும் இணையும் விஷால் – சுந்தர் சி கூட்டணி…
4 கார்த்திகை 2025 செவ்வாய் 14:16 | பார்வைகள் : 2822
நடிகை நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சுந்தர்.சி விஷால் நடிக்கும் தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார். ‘மதகஜராஜா’ திரைப்பட வெற்றிக்குப் பிறகு, சுந்தர்.சி மற்றும் விஷால் மீண்டும் இணைந்து பணிபுரிவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் இதற்கு முன் ‘ஆம்பள’, ‘மதகஜராஜா’, ‘ஆக்ஷன்’ போன்ற படங்களில் விஷால் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தமன்னா மற்றும் கயாடு லோகர் கதாநாயகிகளாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஒரு புரோமோ வீடியோவும் ஏற்கனவே படமாக்கப்பட்டு, அதன் வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நவம்பரில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் அந்த புரோமோவை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. விஷால் படத்தை முடித்தவுடன் ரஜினிகாந்தை வைத்து அடுத்த படத்தை இயக்க சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார். இதற்கான கதை விவாதங்கள் மற்றும் முன் தயாரிப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire