இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு
6 கார்த்திகை 2025 வியாழன் 10:22 | பார்வைகள் : 3241
இலங்கை முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டிசம்பர் ஏழாம் திகதி மீள கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. டிசம்பர் ஐந்தாம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் எட்டாம் திகதி முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், ஆண்டின் இறுதி விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்.
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire