பீஹார் தேர்தலில் சொந்த சாதனையை முறியடித்த பாஜ; 20 ஆண்டுகளில் மாறிய அரசியல் நிலவரம்
15 கார்த்திகை 2025 சனி 05:02 | பார்வைகள் : 4698
பீஹார் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவு தனிப்பெரும் கட்சியாக பாஜ 93 தொகுதிகளில் வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.
பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. ஆளும் கட்சி கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது என்றபோதும், அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றன என்பது முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் பீஹார் மாநில அரசியலில் தமது சொந்த சாதனையை பாஜ தோற்கடித்து மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. பாஜ, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கை கோர்த்தது.
இந்த கூட்டணியினர் தலா 101 தொகுதிகள் என்ற அடிப்படையில் தேர்த்லில் போட்டியிட்டனர். பாஜ தாம் போட்டியிட்ட 101 தொகுதிகளில் 89 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தாம் போட்டியிட்ட 101 தொகுதிகளில் 85 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது.
கூட்டணியாக இருந்த போதிலும்,பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வரலாற்றில் தனிப்பெரும் கட்சியாக பாஜ உருவெடுத்து உள்ளது.
2005ம் ஆண்டு பாஜவுக்கு கிடைத்தது 37 தொகுதிகள் ஆகும். இதுவே 2010ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 91 ஆக எகிறியது. அதன் பின்னர் 2015ம் ஆண்டு தேர்தலின் போது கொஞ்சம் குறைந்து 53 ஆக இருந்தது.
இந்த வெற்றி அம்மாநில அரசியலில் பாஜ பெற்ற குறிப்பிடத்தக்க வெற்றியாகும். 20 ஆண்டுகளில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள இந்த வளர்ச்சி, அந்த கட்சியின் சாதனையாக கருதப்படுகிறது. 2005ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த தேர்தல் வெற்றியானது மும்முடங்கு வெற்றி என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire