வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுக்கு முற்றுப்புள்ளி! ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது கமிஷன்
19 கார்த்திகை 2025 புதன் 13:44 | பார்வைகள் : 4931
மேற்கு வங்கத்தில் நடக்கும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகள், இறந்த வாக்காளர்கள் ஆகியோரை கண்டறிந்து நீக்க, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தேர்தல் கமிஷன் பயன்படுத்த உள்ளது.
வாக்காளர் பட்டியலில் போலி பதிவுகள் மற்றும் இரட்டை பதிவுகள் இடம் பெற்றிருப்பது, ஜனநாய கத்தின் அடித்தளத்தையே அசைப்பதுடன் பல குழப்பங்களையும், பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது.
வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் அதிகமாகச் சேரும்போது, உண்மையான வாக்காளரின் ஓட்டுக்கு மதிப்பு குறைகிறது.
இது, வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும். எனவே தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
போலி பதிவு இந்த ஆண்டு பீஹாரில், சட்டசபை தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், 60 லட்சம் போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
பீஹாரைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம், சத்தீஸ்கர், கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி தீவிரமாக நடக்கிறது.
இதில், தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது.
மேற்கு வங்கத்தில் தற்போது நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தேர்தல் கமிஷன் பயன்படுத்த உள்ளது.
இதன் மூலம், ஒரே நபர் வாக்காளராகப் பல இடங்களில் பதிவு செய்திருந்தாலோ அல்லது ஒரே புகைப்படத்தை பயன்படுத்திப் பல போலி பதிவுகள் இருந்தாலோ, அந்தப் பதிவுகளை ஏ.ஐ., உதவியுடன் முகத்தை பொருத்தி பார்க்கும் தொழில்நுட்பம் அடையாளம் காண உதவும்.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
புலம்பெயர்ந்த தொழி லாளர்களின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு அதிக புகார்கள் வந்துள்ளன.
அதே போல் இரண்டு இடங்களில் ஓட்டுகள் வைத்திருப்போர் அதிகரித்துள்ளதாகவும் புகார் உள்ளது.
உதவிக்காக மட்டுமே இதற்காக ஏ.ஐ., அம்சத்துடன் கூடிய முகத்தை பொருத்தி பார்க்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்.
இருப்பினும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உறுதி செய்த பின்னரே, ஏ.ஐ., கண்டறிந்த பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப் படும். உதவிக்காக மட்டுமே ஏ.ஐ., பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire