ஜனாதிபதி, கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
20 கார்த்திகை 2025 வியாழன் 17:13 | பார்வைகள் : 4011
மசோதா மீது முடிவெடுக்க, ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன பெஞ்ச் இன்று நவ.,20ல் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிமன்றம், 'மசோதாக்கள் மீது ஒரு மாதத்தில் இருந்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்' என, கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தனர்.
விசாரணை
இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தையே வழக்காக மாற்றிய தலைமை நீதிபதி கவாய், இதன் மீது ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார்.
தீர்ப்பு
அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்தது. கடந்த செப்., 11ல் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (நவ.,20) ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.
சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
* மாநில சட்டமன்றங்களில் நிறைவேறிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான சட்ட விதி 200ன்படி, உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது, கூட்டாட்சி நலனுக்கு எதிரானது.
* மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில் வைத்திருப்பதற்கு கவர்னர்களுக்கு அதிகாரம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
* கவர்னர்களுக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. ஒன்று மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, இரண்டாவது மசோதாவை மறு பரிசீலனை செய்யக்கோரி திருப்பி அனுப்புவது, மூன்றாவது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது.
* இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், முடிவெடுக்க கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிப்பது, அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.
* ஏப்ரல் 8ம் தேதி இரு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், நிலுவையில் இருந்த தமிழக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த தீர்ப்பானது, அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பின் செயல்பாடுகளை தானே கையில் எடுத்துக் கொண்டதற்கு சமம். எனவே, அந்த தீர்ப்பு நிராகரிக்கப்படுகிறது.
* கவர்னர்களின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. அதே நேரத்தில் நீண்ட காலம் மசோதாவை கிடப்பில் வைத்திருந்தால் நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய முடியும்.
* மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களின் கருத்துக்களை கேட்க தேவையில்லை. வேண்டுமென்றால் மசோதா மீது நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டு கொள்ள முடியும்.
* மசோதா மீது முடிவெடுக்க ஜனாதிபதி, கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது.
* Deemed Assent (தானாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதுவது) என்ற கருத்து, அரசியலமைப்பின் ஆன்மாவுக்கும், அதிகாரப் பகிர்வு கோட்பாடுகளுக்கும் முரணானது.
* அரசியல் சட்டம், Deemed Assent (தானாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதுவது) என்பதை அனுமதிக்கவில்லை.
* சுப்ரீம் கோர்ட், அரசியல் சட்டத்தின் 142வது பிரிவை பயன்படுத்தி, Deemed Assent (தானாகவே ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதுவது) வழங்கக்கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னடைவு
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு, மாநில அரசுகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குறிப்பாக, கவர்னரை எதிர்த்து வழக்கு தொடுத்த தமிழகம், கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களின் நிலைப்பாட்டுக்கு கிடைத்த தோல்வியாகும்.
இதன் மூலம், கவர்னரின் எந்த ஒரு முடிவை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கலாம்; உத்தரவு பெற்று விடலாம் என்ற எதிர்க்கட்சி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதன் மூலம் கவர்னருக்கு அழுத்தம் தர முடியும் என்ற திமுகவின் அரசியலுக்கு கிடைத்த தோல்வியாகவும் இந்த தீர்ப்பு கருதப்படுகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire