அமெரிக்க செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
25 கார்த்திகை 2025 செவ்வாய் 08:09 | பார்வைகள் : 2440
அமெரிக்க செயற்கைக்கோளை, வணிக ரீதியில் அடுத்த மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 2040ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளின் விண்வெளி திட்டங்களுக்கு இணையாக இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களும் இருக்கும்.
அமெரிக்காவின் தகவல் தொடர்பு செயற்கைக்க்கோள் ஒன்றை இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. தேதி இன்னும் முடிவாகவில்லை. அநேகமாக அடுத்தமாதமாக இருக்கும். அது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள். எல்விஎம்3( Launch Vehicle Mark III) மூலம் அந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது கூட்டுத்திட்டம் கிடையது. வணீக ரீதியில் செயல்படுத்த உள்ளோம்.
தற்போது விண்ணில் 57 செயற்கைக்கோள்கள் உள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிக்கும். இந்திய வீரர்களை, விண்வெளிக்கு பத்திரமாக அனுப்பி, மீண்டும் அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்துகிறது. பூவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டங்களிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சந்திரயான்- 4 மற்றும் 5 ஆகிய திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரயான் -4 திட்டம் 2028 ல் செயல்படுத்தப்படும். ஜப்பானின் விண்வெளி மையத்துடன் இணைந்து சந்திரயான் -5 செயல்படுத்தப்பட உள்ளது.
புவி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு மற்றும் நேவிகேஷன் ஆகியவற்றில் செயற்கைக்கோளுக்கான தேவை அதிகமாக உள்ளது. அதனை நோக்கி நாம் பணியாற்றி வருகிறோம். இந்தியாவுக்கு என சொந்தமாக விண்வெளி நிலையம் கட்டவும் பணியாற்றுகிறோம். இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire