துரைமுருகனுடன் மோதுகிறார் செல்வப்பெருந்தகை
23 ஐப்பசி 2025 வியாழன் 09:17 | பார்வைகள் : 2209
செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க தொகுதி எம்எல்ஏவான தன்னை அழைக்காத அதிகாரிகளை செல்வப்பெருந்தகை கடிந்து கொண்டார். '' நீர்வளத்துறை வெறி பிடித்துப் போய் கிடக்கிறது'' என அதிகாரிகளிடம் கூறினார்.
நீர் வெளியேற்றம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்து இன்று (அக்.22) காலை நிலவரப்படி 2170 கன அடியாக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் 20.84 அடியாக உயர்ந்துள்ளது.நீர்மட்டம் உயருவதால் பாதுகாப்பு கருதி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏரியைில் ஆய்வு
இந்நிலையில் மெ்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறித்து, தொகுதியின் மக்கள் பிரதிநிதியான என்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவரும் , ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
இதெல்லாம் தப்பு
அந்த ஏரியை பார்வையிட்ட போது அவர் கூறியதாவது: ஒரு மக்கள் பிரதிநிதியாக சேர்மனுக்கு தெரியல மந்திரிக்கு தெரியல. அமைச்சருக்கு தெரியல.எம்எல்ஏவுக்கு தெரியல. எம்பிக்கு தெரியல. நீங்களே திறந்து விடுறீங்கனா எப்படி சார் அது. இந்த துறை வந்து அரசு துறை தானே? நீர்வளத்துறை அரசுத்துறைதானே? மக்கள் பிரதிநிதியிடம் ஒரு வார்த்தை சொல்லலாம். மரபு என்ன?காலம் காலமாக எப்பவுமே சொல்வீங்க நானும் 3 வருஷமா திறந்துவிட்டுருக்கேன். போன வருஷம் சொல்லாம கொள்ளாம திறந்துவிட்டுட்டீங்க. தப்பு கிடையாது.திறங்க. நீங்களே ஆட்சியாளர்களாக, நீங்களே மக்கள் பிரதிநிதிகளாக மாறுங்கள். மக்களுக்கு நல்லது செய்யுங்கள். நான் தானே ஊர் ஊராக போகப்போறேன். '500 அடி திறந்துருக்காங்க. கொஞ்சம் கவனமா இருங்க' என சொல்லிக்கொண்டு எல்லா ஊருக்கும் போகப்போறேன். 12 13 ஊருக்கு 'புரோகிராம்' போட்டு போகப்போறேன். இதெல்லாம் தப்பு. இத சொல்லணும்ல.
சமாதானம்
நீங்களே மக்கள் பிரதிநிதியாகிவிட்டால் அப்புறம் எதற்கு கவர்மென்ட். அதிகாரிகளே 'கவர்மென்ட்ட' 'ரன்' பண்ணிக்கலாமே? இந்தத் துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறதுனே தெரியல போங்க எனக்கூறிவிட்டு சென்றார்.நடந்து சென்ற அவரை , அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்றனர்.
அப்போது செல்வப்பெருந்தகை கூறுகையில், நேற்று 12 மணியில் இருந்து டிவியில் ஓடிக் கொண்டிருக்கு. 4 மணிக்கு திறக்கப் போறாங்கனு. பூசணிக்காய் உடைக்கிறீங்க. பூஜை போடுறீங்க. தேங்காய் உடைக்கிறீங்க. மக்கள் பிரதிநிதிக்கு ஒரு சேர்மன் இருக்கிறார். ஒன்றிய செயலாளர் இருக்கிறார். எம்பி எம்எல்ஏ இருக்கிறார்கள். ஒரு வார்த்தை சொன்னால் என்ன கெட்டுப்போயிடும் உங்களுக்கு. அவ்வளவு 'பிரஸ்டீஜ்'.இவங்கல்லாம் திறக்கக்கூடாது தண்ணீய. இவங்கெல்லாம் தொடக்கூடாது.வெறி பிடிச்சுப்போய் கிடக்குதுங்க இந்தத்துறை எனக்கூறிவிட்டு சென்றார்
மக்கள் பிரதிநிதி எதற்கு
காரில் ஏறி அமர்ந்த பிறகு அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் செல்வப்பெருந்தகை கூறுகையில், இவங்கெல்லாம் வரக்கூடாது. மக்கள் பிரதிநிதி வரக்கூடாது. இன்ஜீனியர் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றால் அப்புறம் எதுக்கு மக்கள் பிரதிநிதி. எப்படி சிஎம் உழைக்கிறார்னு தெதரியும். டெபுடி சிஎம் உழைக்கிறார். அவங்கவுங்க ராத்திரி பகல் உழைக்கிறாங்க.எங்களை கூப்பிட்டு... இப்ப நான் 10 கிராமத்துக்கு போகப்போறேன். நான்தானே எல்லா கிராமத்துக்கும் போயிட்டு வந்து எல்லா கிராமத்துக்கும் எச்சரிக்கை சொல்லப்போறோம். சாப்பாடு அரெஞ்ச் பண்ணப்போறோம். நீங்களா பண்ணப்போறீங்க. திறந்துவிட்டு கம்முனு உட்காந்துருக்கீங்க. ஒரு வார்த்தை சொன்னால் என்ன குறைஞ்சு போயிடும்.
டிவியில பார்த்துவிட்டு 4 ,5 மணி நேரமா டிரை பண்ணுறேன். போன எடுக்க மாட்டேன்றீர்கள்.எத்தனை மிஸ்டு கால் இருக்கும் எனப் பாருங்கள். அதெல்லாம் பண்ணாதீர்கள். நான் எம்எல்ஏ பொறுமையா போறேன். இன்னொருத்தன் வந்தா பொறுத்துக்குவாங்களா? மக்கள் பிரதிநிதி வேலைய நீங்களே சேர்த்து செய்யுறீங்கனா அப்புறம் எதற்கு மக்கள் பிரதிநிதி?.
ஒரு மரபுனு ஒன்னு இருக்குல.காலம் காலமாக பிரிட்டிஷ் ஆட்சிக்காரன் காலத்தில் இருந்து கூப்பிட்டு தான் வெச்சு பூஜை போட்டு திறப்பார்கள்.நீங்கள் அதை மாதிரி செய்யுங்கள்.எங்களுக்கு இதனால் ஒரு சிறுமையும் இல்லை. சிறுமைப்படுத்துவதாக நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. நாங்கள் மக்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கப்போறோம். இவ்வாறு கூறிவிட்டு காரில் கிளம்பிச் சென்றார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire