மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்...?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்...?

24 ஐப்பசி 2025 வெள்ளி 13:29 | பார்வைகள் : 2777


இந்நிலையில், பைசன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சேலம் வந்த படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் அமீர், ரஜீஷா விஜயன் மற்றும் இசை அமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா ஆகியோர் பேர்லன்ஸ் பகுதியில் உள்ள திரையரங்கில் ரசிகர்கள் முன்பு திடீரென தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.அப்போது படத்தின் இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா ரசிகர்கள் முன் தீக்கொழுத்தி பாடல் பாடி ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து திரைப்பட குழுவினருடன் ரசிகர்கள் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும்போது, பைசன் படத்தை மக்கள் முழு மனதோடு கொண்டாடுகிறார்கள். திரையரங்குகள் நிரம்பி வழிகிறது. மாமன்னன் படத்தை சேலத்தில் தான் எடுத்தேன். ஆதரவு தந்த மக்களுக்கு படக்குழு சார்பில் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மாரி செல்வராஜ் அடுத்த படம் தனுஷை வைத்து இயக்குகிறேன். பெரிய பட்ஜெட்டில் பெரிய படமாக இருக்கும் என்றார். கடந்த காலத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது இளைஞர்களுக்கு பல சிக்கல்கள் உள்ளது. அதை உடைக்கும் வகையில் தான் பைசன் எடுக்கப்பட்டது. இந்த மாதிரி படங்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்றால் மாற்றத்திற்கு மக்கள் தயாராக உள்ளனர் என்றுதான் அர்த்தம் என கூறினார்.

ரஜினி, தனது அனைத்து படத்திற்கும் படக்குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினியுடன் பல உரையாடல்கள் நடத்தி உள்ளேன். ரஜினியை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயம் அவருக்கு ஏற்ற மிகப்பெரிய படமாகத்தான் இருக்கும். இன்பநிதி வைத்து இயக்கவுள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மாமன்னன் படம் எடுக்கும்போதே ரெட் ஜெயண்ட் உடன் மேலும் ஒரு படம் இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் கதாநாயகன், கதாநாயகி குறித்து இன்னும் முடிவாகவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இயக்குனரும் நடிகருமான அமீர், தமிழ்நாட்டில் அரசியலில் சினிமா இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டில் அரசியலுக்கும் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தற்போது கூட சினிமாவில் இருந்து வந்தவர்தான் முதல்வர் வேட்பாளராக உள்ளார்.

மாரியின் அரசியல் சினிமாவில்தான் ; நான் சினிமாவில் பெரிதும் அரசியல் பேசமாட்டேன் என்றார். மேலும் வடசென்னை 2 படத்தில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை வெற்றிமாறன்தான் முடுவு செய்வார். இசை அமைத்துள்ள நிவாஸ் பிரசன்னாவை அன்டர்ரேட்டடு என்பதை எதிர்க்கிறேன். தற்போதைய சூப்பர் ஸ்டாராக இருப்பவர்களுக்கு கூட முதல் படத்தில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.

தொடர்ந்து படிக்க