நெய்மரின் ருத்ர தாண்டவம் - சாண்டோஸ் அணி ரசிகர்கள் கொண்டாட்டம்
29 கார்த்திகை 2025 சனி 13:05 | பார்வைகள் : 3537
ஸ்போர்ட் அணிக்கு எதிரான போட்டியில் நெய்மரின் சாண்டோஸ் அணி அபார வெற்றி பெற்றது.
எஸ்டேடியோ அர்பனோ மைதானத்தில் நடந்த Serie A கால்பந்து போட்டியில் சாண்டோஸ் மற்றும் ஸ்போர்ட் அணிகள் மோதின.
காயத்தில் இருந்து வந்த நெய்மர் ருத்ர தாண்டவம் ஆடினார். 25வது நிமிடத்தில் அபார கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 67வது நிமிடத்தில் சாண்டோஸ் (Santos) வீரர் ஜோவோ ஷ்மித் அடித்த கோலுக்கும் நெய்மர் உதவினார்.
எதிரணி வீரர் லூகாஸ் கல் (Lucas Kal) சுய கோல் அடிக்க, சாண்டோஸ் அணிக்கு மேலும் ஒரு கோல் கிடைத்தது.
கடைசிவரை ஸ்போர்ட் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், சாண்டோஸ் அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
நெய்மர் காயத்திற்கு மத்தியில் விளையாடி கோல் அடித்து வெற்றி பெற வைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மிரஸ்ஸோல் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் நெய்மர் கோல் அடித்திருந்தாலும், அப்போட்டி 1-1 என டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire