சிலிகுரி அருகே 3 ராணுவ தளங்களுக்கான பணிகள் ஆரம்பம்!: இந்தியா
30 கார்த்திகை 2025 ஞாயிறு 14:14 | பார்வைகள் : 2164
வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய வழித்தடமான மேற்கு வங்கத்தின் சிலிகுரி அருகே, மூன்று புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், நம் அண்டை நாடுகளான சீனா மற்றும் வங்கதேசம் அதிர்ச்சி அடைந்துள்ளன.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிலிகுரி. சிறிய வழித்தடமாக இருந்தாலும், இது நாட்டின் மிக முக்கியமான பகுதி. இப்பகுதியை, 'கோழியின் கழுத்து' என்று அழைப்பர்.
வரைபடத்தில் பார்க்கும்போது, கோழியின் கழுத்து போன்று இருப்பதால், இவ்வாறு அழைக்கப்படுகிறது. சிலிகுரியில் உள்ள இந்த 22 கி.மீ., நீள வழித்தடம், வடகிழக்கு மாநிலங்களை, நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது.
அச்சுறுத்தல் இந்நிலையில், நம் அண்டை நாடான சீனாவுடன் நெருக்கம் காட்டும் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தின் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, சிலிகுரிக்கு அருகே சில மாதங்களுக்கு முன் இரண்டாம் உலகப் போரின் போது கைவிட்ட விமான தளத்தை சீரமைத்தது.
இது, இப்பிராந்தியத்திற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நம் ராணுவம் சிலிகுரியை சுற்றி மூன்று புதிய ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இவை, மேற்கு வங்கத்தின் சோப்ரா, பீஹாரின் கிஷன்கஞ்ச், அசாமின் துப்ரி ஆகிய இடங்களில் அமைகின்றன.
இந்த ராணுவ தளங்கள் வெறும் முகாம்களாக மட்டும் இருக்காது; போருக்கான உத்திகளை வகுக்கும் முழு கட்டுப்பாடு மையங்களாக இருக்கும். படைகளை விரைவாக குவிக்கவும், உளவுப் பணிகளுக்கு பயன்படும் வகையிலும் உருவாக்கப்படுகின்றன.
இது குறித்து ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:
எந்த சூழலிலும் சிலிகுரி கழுத்துப் பகுதி எதிரிகளால் துண்டிக்கப்படாதவாறு, பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் நம் ராணுவம் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
வங்கதேச இடைக்கால அரசு, சீனா - பாகிஸ்தான் நாடுகளுக்கு நெருக்கமாகி வருகிறது. சீனாவிடம் இருந்து, 'ஜே -- 10 சி' போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முயற்சிக்கிறது.
எச்சரிக்கை மணி ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் உற்பத்தியிலும் சீனாவுடன் அந்நாடு இணைந்து செயல்படுகிறது. மேலும், நம் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தான், 'ஜெ.எப்., 17' போர் விமானம் வழங்கி வங்கதேசத்துக்கு உதவியுள்ளது.
இது போன்ற நடவடிக்கை, நம் நாட்டு பாதுகாப்பு விவகாரத்தில் எச்சரிக்கை மணியாக அமைந்தது.
இதன் காரணமாகவே, தற்போது சிலிகுரியை சுற்றி மூன்று ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் நம் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தின் சோப்ராவில் அமைய உள்ள ராணுவ தளம், வங்கதேச எல்லையிலிருந்து 1 கி.மீ.,க்கும் குறைவான துாரத்தில் உள்ளது.
இதன் மூலம் அந்த நாட்டை கண்காணிக்கவும், போர் சூழலில் பதில் நடவடிக்கையை விரைந்து எடுக்கவும் முடியும்.
ரபேல் போர் விமானங்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட வான் பாதுகாப்பு கவசங்களை இந்தப் பகுதியில் குவிக்க முடியும்.
இதனால், பலவீனமாகக் கருதப்பட்ட சிலிகுரி கழுத்துப்பகுதி இனி வலுவானதாக மாறும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire