பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர்! 14 மசோதாக்களை நிறைவேற்ற அரசு தரப்பு தீவிரம்
1 மார்கழி 2025 திங்கள் 05:13 | பார்வைகள் : 3273
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில், எஸ்.ஐ.ஆர்., விவகாரம், 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், சோனியா, ராகுலுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு, டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் உட்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அதேசமயம், இந்த கூட்டத்தொடரில், அணுசக்தி மசோதா உட்பட, 14 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், இன்று துவங்கி 19ம் தேதி வரை நடக்கும் என, பார்லி., விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, மேற்கு வங்கம், தமிழகம், உத்தர பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில், தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளது.
திட்டமிட்டுள்ளனர்
இதில், மத்திய அரசின் தலையீடு உள்ளதாகவும், தேர்தல் கமிஷன் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக பார்லி.,யில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அதனால், இக்கூட்டத்தொடரில் எஸ்.ஐ.ஆர்., விவகாரம் தொடர்பாக பிரச்னைகளை எழுப்ப அக்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. அத்துடன், டில்லி கார் குண்டுவெடிப்பு, டில்லி காற்று மாசு தொடர்பாகவும் கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா, அவருடைய மகனும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் உட்பட ஆறு பேர் மீது புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால், இந்த விவகாரமும் இந்தக் கூட்டத்தொடரில் பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், அணுசக்தி, உயர்கல்வி, பெருநிறுவன சட்டம், சண்டிகர் நிர்வாகம் தொடர்பான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் உட்பட 14 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 'வந்தே மாதரம்' பாடலின், 150வது ஆண்டை குறிக்கும் வகையிலான சிறப்பு விவாதம் நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
அமோக வெற்றி
பீஹார் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதனால், மத்தியில் ஆளும் தரப்பு மிகுந்த தெம்புடன் உள்ளது. அதேநேரத்தில், இந்தத் தேர்தல் முடிவானது, எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. தோல்விக்கு காங்கிரசே காரணம் என, கூட்டணியில் உள்ள கட்சிகள் கூறி வருகின்றன. அதனால், இந்தக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வார விடுமுறை நாட்களை கழித்தால், 15 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடக்கும் என்பதால், சபைகளை பிரச்னைகளின்றி சுமுகமாக நடத்தவும் அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது. ஆளும் மற்றும் எதிர்தரப்பினர், பல சர்ச்சைக்குரிய பிரச்னைகளை முன்னெடுத்து விவாதிக்க உள்ளதால், இந்த குளிர்கால கூட்டத்தொடரில் புயலடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மழைக்கால கூட்டத்தொடரில், ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரின் ராஜினாமா கிளப்பியிருந்த புயலுக்கு பின், துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிக்கு வந்துள்ள நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது.
ராஜ்யசபாவில், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் போன்ற கோஷங்கள் எழுப்பக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைவர் என்ற முறையில் சபையை, ராதாகிருஷ்ணன் எவ்வாறு நடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. பளீர் சந்திரகுமார்
பாரிஸ் போர்தோ, யாழ்ப்பாணம் கொழும்பதுறை
வயது : 43
இறப்பு : 22 Aug 2026
-
1
எழுத்துரு விளம்பரங்கள்
தமிழ் மொழிபெயர்ப்பு & மொழிபெயர்ப்பாளர் சேவை
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Pontault-Combault வீடு விற்பனைக்கு
🏡வீடு விற்பனைக்கு வசிப்பிடப் பரப்பளவு : சுமார் 160 m² à Pontault-Combault 77
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
🚗 கார் விற்பனைக்கு Toyota 2024 - 29000KM - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire