விக்கலால் ஏற்படும் சிக்கல்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 18254
விக்கல் சிலருக்கு எப்போதாவதும், சிலருக்கு அடிக்கடி ஏற்படுவது பற்றியும் ஒருவர் அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டும். இதற்கான மருத்துவ காரணங்கள் மிகவும் முக்கியமானவை.
பொதுவான காரணங்கள்:
* வயிற்று வீக்கம் - உணவு, மது, காற்று.
* பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அதிகம் அருந்துதல்.
* திடீரென வயிற்றின் உஷ்ண நிலை மாறுபடுதல்.
* திடீர் மன எழுச்சி, மன உளைச்சல் - இது பொதுவானது. அடிக்கடி அல்லது தொடர்ந்து ஏற்படும் காரணங்கள்:
* மன உளைச்சல், மன அழுத்தம், பயம், மனோரீதியான காரணங்கள்.
* நரம்பு மண்டல பாதிப்புகள்.
* நிமோனியா, நுரையீரல் பாதிப்புகள், கண் பாதிப்பு (குளோக்கோமா), அல்சர், குடல் பாதிப்புகள். * குறைந்த சோடியம், பொட்டாஷியம், கால்ஷியம், சர்க்கரை.
* சில குறிப்பிட்ட வகை மருந்துகள்.
* மிகவும் நீண்ட கழுத்து. - விக்கல்கள் பொதுவாக மாலையில் அதிகமாக இருக்கும். அமெரிக்காவில் ஒருவருக்கு தொடர்ந்து 1922-லிருந்து 1990 வரை விக்கல் (சுமார் 68 வருடம்) இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில எளிய வழிமுறைகள்:
* சிறிது சர்க்கரை விழுங்குதல்.
* சிறிது குளிர்ந்த நீரை சிறிது சிறிதாக பருகுதல் (ஐஸ் வாட்டர்)
* சிறிது நொடிகள் மூச்சை நிறுத்தி, வெளிவிடுதல்.
* காளி போன்று நாக்கை வெளியே சற்று இழுத்து உள்ளிழுத்தல்.
* தரையில் படுத்து முட்டியை நெஞ்சு வரை மடக்கி நீட்டுதல்.
சிகிச்சை:
* மருத்துவரிடம் முறையான காரணத்தை அறிந்து, அதற்கான சிகிச்சைப் பெறுதல்.
வராமல் தடுக்க:
* மிகப் பெரிய, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிருங்கள் (விருந்து)
* காரமான மசாலா உணவுகளை தவிருங்கள்.
* மது, பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களைத் தவிருங்கள்.
* திடீரென்று வெயிலிலிருந்து ஏ.சி.,க்கு செல்லுதல் அல்லது ஏ.சி.,யிலிருந்து உடனடியாக வெயிலுக்குச் செல்லுதல் போன்ற உஷ்ண நிலையைத் தவிர்த்து விடுங்கள்.
வாய்ப்புண்:
நமது வாயைச் சுற்றியதசை மிகவும் மென்மையானவை. வாயின் உள் கன்னங்கள், ஈறு, நாக்கு, உதடு, மேல் அன்னம், உள் நாக்கு போன்றவை மிகவும் மென்மையானவை. வாயின் ஓரங்களில் புண் இருப்பது, பொதுவாக காணப்படும் ஒன்று என்றாலும், அதற்கான கவனம் தேவை.
அதற்கான காரணங்கள்:
* அடிபட்டுக் கொள்ளுதல், கடித்துக் கொள்ளுதல்.
* வாய் சுத்தமின்மை.
* மன உளைச்சல் (ஸ்டரஸ்), டென்ஷன்.
* கொதிக்க கொதிக்க காபி, டீ போன்றவற்றை அருந்துதல்.
* உணவு அலர்ஜி
* வைட்டமின் பி12 சத்து குறைவு.
* இரும்பு சத்து குறைவு.
* ஹார்மோன் சரியின்மை.
* புற்றுநோய்க்கான சிகிச்சைகள்.
* புகைப்பிடித்தல், மது அருந்துதல்.
* பொய்ப் பல் கட்டுவது முறையாக பொருந்தாமை.
* சர்க்கரை நோய்.
* வாய்ப்புற்றுநோய், சின்னம்மை, கிருமித் தாக்குதல்.
அறிகுறிகள்:
* வலி
* வீக்கம்
* ரத்தம் கசிதல்.
* உணவு மெல்லக் கடினம்.
* பல் துலக்குவதில் கடினம்.
* பசியின்மை மருத்துவ உதவி:
இரண்டு வாரத்திற்கு மேல் புண்கள் நீடித்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகுங்கள்.
* புது மருந்து உட்கொள்ள ஆரம்பித்தவுடன் புண் தோன்றினால், உடனடியாக மருத்து வரை அணுகவும். * வாய் உள்ளே வெள்ளையாக தடித்த பகுதிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
* இப்புண்ணோடு ஜூரம், சரும பாதிப்பு, உணவு விழுங்குவதில் கடினம் போன்றவை இருந்தால், உடனடி மருத்துவ உதவி தேவை.
தவிர்க்கும் முறை:
முறையான பல் பரிசோதனை வருடம் ஒருமுறை செய்துக் கொள்ளவேண்டும்.
* தினமும் இரு முறை பல் துலக்குதல் அவசியம்.
* மிருதுவான பிரஷ் உபயோகித்தல் நல்லது.
* உணவை மெதுவாக மென்று உண்ண வேண்டும்.
* புகையிலை தவிர்ப்பது அவசியம்.
வாய்ப்புண்ணை தடுக்க :
* வாயை சுத்தமாக வைத்திருங்கள்.
* உப்பு கலந்தமிதமான வெந்நீரில்வாய் கொப்பளியுங்கள்.
* அதிகமான திரவ உணவு, நீர் எடுத்துக் கொள்ளுங்கள்.
* கிருமி நாசினி கலந்த வாய்லோஷன் உபயோகப்படுத்துங்கள்.
* கார, மசாலா உணவுகளைத் தவிருங்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire