அமெரிக்க வரி விதிப்பால் மூலப்பொருள் விலை உயர்வு: கோவையில் அதிகரிக்கும் வேலை இழப்பு
19 தை 2026 திங்கள் 04:47 | பார்வைகள் : 2958
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால் கோவை, திருப்பூரில் ஜவுளித்தொழில் துறையினர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். மேலும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஜவுளி, வார்ப்படம், மோட்டார் பம்ப் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி குறைந்து உள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து ஜவுளி தொழில் துறையினர் கூறியதாவது:-
கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டாலர் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அமெரிக்க 50 சதவீதம் வரி விதித்ததால் அது ஒரு பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் அமெரிக்க சந்தைக்கான இந்திய ஜவுளி ஏற்றுமதி பூஜ்ஜியமாகி விடும். 50 சதவீத வரிக்கு கூடுதலாக, சாத்தியமான பிற நிலையான வரிகளும் உள்ளன.
இதனால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். இதற்கிடையே அமெரிக்கா 500 சதவீத வரி விதிக்கப்போவதாக கூறுகிறார்கள். அப்படியானால் ஜவுளி ஏற்றுமதி சரிவை சந்திக்கும். எனவே மாற்று வழியாக ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாட்டு சந்தைகளை இந்தியா வலுப்படுத்த வேண்டும் ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய சந்தைகள் போன்ற பிற சந்தைகள் உள்ளன, அவற்றில் சில வரம்புகள் உள்ளன.
ஆப்பிரிக்க சந்தைகள் நம்பகத்தன்மையற்றதால் சவாலாக இருக்கும். ஆசிய சந்தைகள் சிறியவை. அவற்றை மேம்படுத்தி அந்த நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வார்ப்படம் மற்றும் வால்வுகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருள் உற்பத்தி மீதான தாக்கம் குறித்து தொழில்முனைவோர் கூறியதாவது:-
வார்ப்புத்தொழில் துறை இதுவரை வெளிப்படையான பாதிப்பை சந்திக்க வில்லை. ஆனாலும் அடுத்த சில மாதங்களில் 50 ஆயிரம் வேலை இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முதலில் பாதிப்பு இருக்கும். வார்ப்பட தொழிலை பொறுத்தவரை, ஒவ்வொரு நிறுவனமும் முதலில் தேவையை புரிந்துகொண்டு உற்பத்தி பிரிவை வடிவமைக்க வேண்டும். தொடர் ஆய்வுக்கு பிறகு உற்பத்தியை தொடங்கி நடைமுறைக்கு கொண்டு வர 7 மாதங்களுக்கு மேல் ஆகும்.
கோவையில் பம்புகள், மோட்டார்கள், ஆட்டோமொபைல், ஜவுளி எந்திரங்கள், சுரங்கம் மற்றும் கட்டுமானம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, எந்திர கருவிகள், காற்றாலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 1.2 மெட்ரிக் டன் இரும்பு வார்ப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவையில் இருந்து சராசரியாக 0.75 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் 40 சதவீதம் அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பம்ப் தொழில் முனைவோர் கூறுகையில், அமெரிக்க வரிவிதிப்பு பம்ப் உற்பத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. இது பெரும்பாலும் உள்நாட்டு சந்தையை சார்ந்து உள்ளது. ஆனாலும், அமெரிக்க வர்த்தகத்தை நம்பி உள்ள கோவையை சேர்ந்த மிக சில பெரிய நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்றனர்.
வால்வு உற்பத்தியாளர்கள் கூறும்போது, வால்வு உற்பத்தி துறையில் பெரிய வேலை இழப்பு ஏற்படாது. ஆனால் நிறுவனங்களை மேலும் விரிவாக்கம் செய்ய முடியவில்லை. ஐரோப்பா மற்றும் உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்தி அமெரிக்க தாக்கத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.தற்போது கோவையில் மூலப்பொருள் விலை உயர்வு, அமெரிக்க வரி உயர்வு தாக்கம் காரணமாக வேலை இழப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் துறையினர் வேண்டுகோள் விடுத்து
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison à vendre sur un terrain 400 m² à Pontault-Combault
Maison à vendre sur un terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
Appartement F4 de 72 m² - 175 000€
600 m de la gare RER de Noisy-le-Sec, 3 chambres, Séjour lumineux...
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire