இந்தியாவின் வல்லமை உலக நாடுகளுக்கு உதவும் : ஐரோப்பிய யூனியன் தலைவர்
27 தை 2026 செவ்வாய் 06:33 | பார்வைகள் : 2652
இந்தியாவின் வல்லமை உலக நாடுகளுக்கு பயனளிப்பதாக இருக்கிறது. இதனால், இந்தியாவின் வெற்றி, உலகம் முழுதும் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நிலைத்து நிற்க உதவுகிறது, என, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் குறிப்பிட்டார்.
நம் நாட்டின் 77வது குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க மூன்று நாள் பயணமாக கடந்த 24ம் தேதி, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா இருவரும் டில்லிக்கு வந்தனர்.
உலகளாவிய பிரச்னைகள்
தலைநகர் டில்லியின் கடமை பாதையில் நேற்று நடந்த 77வது குடியரசு தின விழாவில் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, நாட்டின் வலிமையை பறைசாற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை கண்டுகளித்தனர்.
பொருளாதாரம், வளர்ச்சி, அரசியல் உள்ளிட்டவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பு அளிப்பதற்காக, 1993ல் உருவாக்கப்பட்டது ஐரோப்பிய யூனியன். அதில், தற் போது 27 நாடுகள் இடம் பெற்று உள்ளன.
அமெரிக்காவின் வரி விதிப்புகள் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் தீவிரமாக உள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் உடனான உறவை வலுப்படுத்த, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன்படி, ஐரோப்பிய யூனியனுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதற்கான பேச்சு டில்லியில் இன்று நடக்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தை, 'ஒப்பந்தங்களின் தாய்' என்று உர்சுலா குறிப்பிட்டு உள்ளார்.
இந்தியாவின் வல்லமை
இந்நிலையில், தன் இந்திய பயணம் குறித்து, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் நேற்று கூறியுள்ளதாவது:
இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது, என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகச் சிறந்த கவுரவம். உலக நாடுகளில் கூடுதல் ஸ்திரத்தன்மை, வளர்ச்சி, பாதுகாப்பு நிலவுவதற்கு, இந்தியாவின் வல்லமை உதவி வருகிறது .
உலகில் உள்ள பல நாடுகள் இந்தியாவால் பலன் பெறுகின்றன. அதனால், இந்தியாவின் வெற்றி, உலக நாடுகளின் நிலையான வளர்ச்சி, பாதுகாப்புக்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
வரியை குறைக்க திட்டம்
ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தின் டாவோசில் சமீபத்தில் நடந்த, உலக பொருளாதார மன்ற கூட்டத்தின் போது உர்சுலா பேசுகையில், 'இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குள் நுழையவுள்ளன' என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் வகையில், நம் நாடும் ஐரோப்பிய இறக்குமதி கார்கள் மீதான வரியை, 110ல் இருந்து 40 சதவீதமாக குறைக்க திட்டமிட்டு
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
Skanda Dialects traduction - Interprète
Skanda Dialects traduction - Interprète Tamil Rdv particuliers
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
Maison a vendre : Terrain 400 m² à Pontault-Combault
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
à Vendre Toyota C-HR 2.0 200ch GR Sport Première AWD-i - 33 000€
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire