Paristamil Navigation Paristamil advert login

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவது ஆண்டவன் கையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவது ஆண்டவன் கையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்

28 தை 2026 புதன் 05:20 | பார்வைகள் : 2588


சென்னையில் இருந்து விமானத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  மதுரை வந்தார்.  

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வின் அனைத்து சக்திகளும், ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்றைய தலையாய கோரிக்கையாக உள்ளது. என் கோரிக்கையும் அதுதான்,” என்றார்.  

அப்போது, மீண்டும் அ.தி.மு.க.வில் நீங்கள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆண்டவன் கையில் உள்ளது’ என்றார்.  

இதுபோல் கூட்டணியில் உங்களை இணைப்பது குறித்து டி.டி.வி.தினகரன் பேசினாரா? என்றும் கேட்கப்பட்டது. “டி.டி.வி.தினகரன் உள்பட யாரும் என்னை அழைக்கவில்லை, பேசவில்லை” எனவும் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்
Image

ஐஸ்ரின் அருள்ராஜா

வயது : 59

இறப்பு : 17 Aug 2026

  • Ecology

    3

எழுத்துரு விளம்பரங்கள்