இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் கருத்து!
4 தை 2026 ஞாயிறு 16:38 | பார்வைகள் : 2902
திங்கற்கிழமை (05) முதல் ஆரம்பமாகும் புதிய கல்வி ஆண்டில், தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 29ஆம் திகதியும், தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 21ஆம் திகதியும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் ,
புதிய கல்வி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமன்றி, அதற்கு இணையாக இந்த புதிய முறைக்கு மாணவர்களை பழக்கப்படுத்துவதற்கான திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், பெற்றோர்களுக்கும் இது குறித்த அறிமுகத்தை வழங்குவதற்கான புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாடத்தெரிவுகளுக்கு மாணவர்களைப் பழக்கப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை 7,181 பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் ஊடாக 132,580 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, புதிய பாடத் தொகுதிகளுடன் (Modules) தொடர்புடைய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களில் 93 சதவீதமானோருக்கு தற்போது பயிற்சிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு இணையாக, இந்த புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À VENDRE A DRANCY – PAVILLON AVEC 2 LOGEMENTS LOUÉS
MAISON A VENDRE : 5 MIN. DE LA GARE DE DRANCY RER B






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்









Ajouter
Annuaire